தா​ராபுரம் பேரவை தொகுதி இடைத்​தேர்​தலையொட்டி அங்கு பாது​காப்​புப் பணி​க்​காக துணை ராணுவத்​தினர் 500-க்​கும் மேற்​பட்ட போலீ​ஸார் குவிப்பு!!

தாராபுரம்:
தா​ராபுரம் பேரவை தொகுதி இடைத்​தேர்​தலையொட்டி, அங்கு பாது​காப்​புப் பணி​களுக்​காக துணை ராணுவத்​தினர் உள்ளிட்ட 500-க்​கும் மேற்​பட்ட போலீ​ஸார் குவிக்கப்​பட்​டுள்​ளனர்.

தமிழகத்​தில் மது​ராந்​தகம் மற்​றும் தாராபுரம் சட்​டப்​பேர​வைத் தொகு​தி​களுக்கான இடைத்தேர்தல் அக்​.6-ம் தேதி நடை​பெற உள்​ளது. இதற்​கான அனைத்து ஏற்​பாடு​களையும் தேர்​தல் அதி​காரி​கள் மேற்​கொண்டு வரு​கின்​றனர்.

இத்தொகு​தி​யில் தவெக, திமுக, அதி​முக, நாதக, இந்​திய கம்யூனிஸ்ட் என 5 முனை முனைப் போட்டி நிலவி வரு​வ​தால் தேர்தல் களம் சூடு​பிடித்​துள்​ளது.

இதையொட்​டி, அரசி​யல் கட்​சித் தலை​வர்​களின் தீவிரப் பிரச்சாரங்​களும், வாக்​காளர்​களுக்​குப் பணப்​பட்​டு​வாடா செய்வதைத் தடுக்​கும் பொருட்டு பறக்​கும் படை​யினரின் அதிரடி சோதனை​களும் தீவிரப்​படுத்​தப்​பட்​டுள்​ளன.

தேர்​தல் நேர்​மை​யாக​வும், அமை​தி​யான முறை​யிலும் நடை​பெறு​வதை உறுதி செய்​யும் வகை​யில், சட்​டம்​-ஒழுக்​கத்​தைப் பராமரிக்​க​வும், அசம்​பா​விதங்​களைத் தவிர்க்​க​வும் பலத்த பாது​காப்பு ஏற்​பாடு​கள் செய்​யப்​பட்​டுள்​ளன.

இதற்​காக உள்​ளூர் போலீ​ஸார் மற்​றும் துணை ராணுவப் படை​யினர் உள்​ளிட்ட 500-க்​கும் மேற்​பட்ட போலீ​ஸார் பாது​காப்​புப் பணி​யில் ஈடு​படுத்​தப்​பட்​டுள்​ளனர்.

மேலும், பதற்​ற​மான வாக்​குச்சாவடிகளைக் கண்​டறிந்து அங்கு கூடு​தலாக கண்​காணிப்பு கேம​ராக்​கள் மற்​றும் தீவிர ரோந்​துப் பணி​கள் மேற்​கொள்​ளப்​பட​வுள்​ள​தாகத் தேர்​தல் அதி​காரி​கள் தெரி​வித்​துள்​ளனர்.

முதல்​வர் விஜய்​யின் தேர்​தல் பிரச்​சார பொதுக்​கூட்​டம் நடை​பெறும் இடங்​கள், ரோடு ஷோ நடை​பெறும் இடங்​களில் போலீ​ஸார் நேற்​று பாதுகாப்பு காரணங்களுக்காக அணிவகுப்​பில்​ ஈடுபட்​டனர்​.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *