மத வேறுபாடின்றி இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ மதங்களைச் சேர்ந்த குழந்தைகளும் திட்டத்தின் கீழ் ஒரே நிகழ்ச்சியில் தங்க மோதிரம் !!

மதுரை:
மதுரை அரசு ராஜாஜி தலைமை மருத்துவமனையில் நடைபெற்ற ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்ட தொடக்க விழாவில், 3 மதங்களைச் சேர்ந்த தாய்மார்கள் தங்களது குழந்தைகளுடன் மேடையில் அமர வைக்கப்பட்டது கவனம் ஈர்த்துள்ளது.

‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தின் தொடக்க விழாவில் மொத்தம் 27 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கப்பட்டது. இதில் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ மதங்களைச் சேர்ந்த தலா ஒரு தாயார் தங்களது குழந்தையுடன் மேடையில் அமரவைக்கப்பட்டு இருந்தனர்.

முதல்வர் விஜய் முதலில் அந்த 3 குழந்தைகளுக்கும் தங்க மோதிரம் அணிவித்தார்.

மீதமுள்ள 24 குழந்தைகளுக்கும் நிகழ்ச்சியின்போது தங்க மோதிரம் வழங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, ராஜாஜி அரசு மருத்துவமனையின் பிரசவ வார்டுக்குச் செல்லும் முதல்வர் விஜய், அங்கு அனுமதிக்கப்பட்டுள்ள 10 குழந்தைகளுக்கும் தங்க மோதிரம் அணிவிக்க உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மத வேறுபாடின்றி இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ மதங்களைச் சேர்ந்த குழந்தைகளும் திட்டத்தின் கீழ் ஒரே நிகழ்ச்சியில் தங்க மோதிரம் பெறும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது கவனம் பெற்றது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *