டாக்கா:
வங்கதேசத்தில் கால்வாயில் மிதந்த டிரம்மில் இருந்து இந்து மதத்தைச் சேர்ந்தரின் உடல் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நமது அண்டை நாடான வங்கதேசத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு, சிறுபான்மையினரான இந்துக்களுக்கு எதிரான தாக்குதல் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், வங்கதேசத்தின் மைமன்சிங் மாவட்டம் பெகுன்பாரி பகுதியில் உள்ள கால்வாயில், நீல நிற டிரம் ஒன்று மிதந்து வந்தது.
இதைப் பார்த்த உள்ளூர் மக்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன் பேரில் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று அந்த டிரம்மை மீட்டு சோதனை செய்தனர்.
அப்போது, அதில் ஒரு ஆண் சடலம் இருப்பதைக் கண்டு போலீஸார் அதிர்ச்சியடைந்தனர்.
அவரது கால்சட்டையில், மைமன்சிங் இந்து கூட்டுறவு கடன் சங்கத்தால் வழங்கப்பட்ட டோக்கன் ஒன்று இருந்தது.
அதனை வைத்து, இறந்தவர் யார் என்பதை போலீஸார் அடையாளம் கண்டனர்.
நகைக்கடை உரிமையாளர். அதன்படி, அவர் மைமன்சிங் மாவட்டத்தின் அதர்பாரி பில்டிங் பகுதியைச் சேர்ந்த 50 வயதான நிரஞ்சன் சந்திர சூத்ரதார் என்பதும், அவர் நகைக்கடை நடத்தி வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, அவரது மனைவியும், மகனும் அவரின் அடையாளத்தை உறுதி செய்தனர். கூர்மையான ஆயுத காயம் நிரஞ்சனின் தலை மற்றும் மார்பில் கூர்மையான ஆயுதத்தால் வெட்டப்பட்ட காயங்கள் இருப்பதால், அவர் கொலை செய்யப் பட்டு, உடலை டிரம்மில் அடைத்து கால்வாயில் வீசியிருக் கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
இது தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.