அதிமுகவை நம்பிதான் தவெக கட்சி நடத்த முடியும்; தமிழகத்தை ஆள்வது அதிமுகதான் – அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி!!

தாராபுரம்:
“திமுகவாக இருந்தாலும் சரி, தவெகவாக இருந்தாலும் சரி, அங்கு இருப்பவர்கள் அதிமுகவினர்தான்.

அவர்கள் பெரும்பாலும் இங்கிருந்து சென்றவர்கள்தான். அதிமுகவை நம்பிதான் தவெக கட்சி நடத்த முடியும் என்ற நிலைக்கு வந்துவிட்டனர்.

தமிழகத்தை ஆள்வது அதிமுகதான்” என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தாராபுரத்தில் அதிமுக வேட்பாளர் கே.பானுமதியை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் செய்தார்.

அப்போது அவர் பேசுகையில், “தூயசக்தி என்று சொல்லிக் கொள்ளும் நீங்கள் தீயசக்தி, கூட்டணி கட்சிகளின் ஆதரவைப் பெற்றது ஏன்?

ஆட்சி என்பது கவர்ச்சிகரமான வார்த்தைகளில் நடத்துவது அல்ல. ஆட்சி என்பது செயல். தவெகதான் தீய சக்தி. காலத்துக்கு ஏற்ப நடிக்கக் கூடியவர் தவெக தலைவர் விஜய்.

உங்கள் கட்சிக்காரர்களைப் போய்ப் பாருங்கள். வாக்காளர்களைப் போய்ப் பாருங்கள். அதைவிட்டு விட்டு எங்கள் கட்சிக்காரர்களை ஏன் கதவைத் தட்டிக் அழைக்கிறீர்கள்.

நடந்து முடிந்த தேர்தலில் தவெக தலைவருக்கே நம்பிக்கை இல்லாததால்தான் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார்.

திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் ஓர் இடத்தில்தான் போட்டியிட்டோம்.

விபத்தின் காரணமாக ஆட்சிக்கு வந்துள்ளனர். அதை தக்க வைக்க குதிரை பேரம் நடத்தி, ஆட்சியை தக்க வைக்க நினைக்கின்றனர்.

உங்கள் வீட்டு அண்ணனாக இருப்பேன், மாமனாக இருப்பேன் என்று பச்சைப் பொய் பேசுகிறார்.

பாசம் என்று சொன்னால் தாய், தந்தையோடு வாழ வேண்டும், கட்டிய மனைவியோடு வாழ வேண்டும், பெற்ற பிள்ளைகளுடன் வாழ வேண்டும். பாசம் அங்கேதான் பிறக்கும்.

படங்களில் வீர வசனம் மட்டும்தான் பேசுவார். நிஜ வாழ்க்கையிலும் வாழ்ந்து காட்ட வேண்டும். நாங்கள் எல்லாம் அப்படித்தான் வாழ்கிறோம்.

மக்களை குழப்பி வெற்றி பெற்றுள்ளனர். சனி, ஞாயிறு என்றால் முதல்வர் விடுமுறை எடுத்துக்கொள்வார், திங்கள்கிழமைதான் திரும்ப வருவார்.

விஜய் முதல்வர் ஆனதும் விலைவாசி விண்ணை முட்டும் அளவுக்கு அதிகரித்துள்ளது.

திமுகவாக இருந்தாலும் சரி, தவெகவாக இருந்தாலும் சரி, அங்கு இருப்பவர்கள் அதிமுகவினர்தான். அவர்கள் பெரும்பாலும் இங்கிருந்து சென்றவர்கள்தான்.

அதிமுகவை நம்பிதான் தவெக கட்சி நடத்த முடியும் என்ற நிலைக்கு வந்துவிட்டனர். தமிழகத்தை ஆள்வது அதிமுகதான்.

அதிமுக கரைந்து விடும் என்கிறார் ஆதவ் அர்ஜுனா. அதிமுக என்ன சர்க்கரையா?

உங்கள் தலைவர் நாட்டுக்கு சுதந்திரம் வாங்கி கொடுத்தவரா அல்லது தமிழகத்துக்கு தனி மாநில அந்தஸ்து வாங்கி கொடுத்தாரா? என்ன சாதனை செய்தார் என்பதை சொல்லுங்கள்?

முதல்வர் விஜய் 70 படத்தில் நடித்திருக்கிறார். ஆனால், ஒரு தேசிய விருது வாங்க முடியவில்லை.

எங்களை அரசியலில் வீழ்த்த வேண்டும் என நினைத்தீர்கள் எனில், நீங்கள்தான் காணாமல் போவீர்கள்.

வெற்றி பெறும்போது இருமாப்பு கொள்வதும், தோல்வி வரும்போது துவண்டு விடுவதும் அதிமுக அல்ல” என்று அவர் பேசினார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *