மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்… !!

மேஷம்

பயணங்களால் பலன் கிடைக்கும் நாள். செவி குளிரும் செய்திகள் வந்து சேரும். சொன்ன சொல்லைக் காப்பாற்றுவீர்கள். வீட்டுத் தேவைகள் பூர்த்தியாகும்.

ரிஷபம்

விரயங்கள் கூடும் நாள். நாடு மாற்றம், வீடு மாற்றம் தொடர்பான சிந்தனை மேலோங்கும். நீண்டதூரப் பயணங்கள் செல்லப் போட்ட திட்டம் கைகூடும்.

மிதுனம்

லாபகரமான நாள். உறவினர்களின் சந்திப்பால் உள்ளம் மகிழ்வீர்கள். வியாபாரத்தில் வரவேண்டிய பாக்கிகள் வசூலாகலாம். சம்பள உயர்வு பற்றிய தகவல் உண்டு.

கடகம்

புது முயற்சியில் வெற்றி கிடைக்கும் நாள். திருமணப் பேச்சுகள் முடிவிற்கு வரும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்புக் கிட்டும்.

சிம்மம்

தந்தை வழி ஆதரவு கிடைக்கும் நாள். புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்திணைவர். பண வரவு திருப்தி தரும்.

கன்னி

எதையும் யோசித்துச் செய்யவேண்டிய நாள். பயணங்களால் விரயம் உண்டு. உடல்நலத்தில் அக்கறை தேவை. தொழில் பங்குதாரர்களால் தொல்லை ஏற்படும்.

துலாம்

முயற்சியில் வெற்றி கிட்டும் நாள். கடன் சுமை குறையப் புதிய வழிபிறக்கும். உதிரி வருமானம் உண்டு. வருங்கால நலன் கருதி புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள்.

விருச்சிகம்

பிள்ளைகளால் பெருமை சேரும் நாள். வரன்கள் வாயில்தேடி வரும். வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகும். பொதுவாழ்வில் புகழ் கூடும்.

தனுசு

இடம், பூமி வாங்கும் யோகம் ஏற்படும் நாள். வளர்ச்சிக்கு வித்திட்டவர்களின் சந்திப்பு கிட்டும். பொருளாதார முன்னேற்றம் உண்டு. உத்தியோகப் பிரச்சினை அகலும்.

மகரம்

சகோதர ஒற்றுமை பலப்படும் நாள், வருமானம் உயரும். வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகும். முன்னேற்றம் கருதி முக்கியப் புள்ளிகளைச் சந்திப்பீர்கள்.

கும்பம்

வெற்றி வாய்ப்புகள் வீடு தேடி வரும் நாள். வாங்கல், கொடுக்கல்களை ஒழுங்கு செய்து கொள்வீர்கள். உடல் நலம் சீராகும். கூட்டாளிகளால் லாபம் உண்டு.

மீனம்

வருமானம் அதிகரிக்கும் நாள், தொழில் வளர்ச்சிக்கு நண்பர்களின் ஒத்துழைப்புக் கிட்டும். அடுத்தவர் நலன் கருதி எடுத்த முயற்சியில் ஆதாயம் உண்டு.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *