பருவமழை தொடங்கவுள்ள நிலையில் காரைக்காலில் விளம்பர பதாகைகள் வைக்கத் தடை – நகராட்சி ஆணையர் அறிவிப்பு!!

காரைக்கால்:
பருவமழை தொடங்கவுள்ள நிலையில் காரைக்காலில் விளம்பர பதாகைகள் உள்ளிட்டவை வைப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக காரைக்கால் நகராட்சி ஆணையர் எஸ்.சுபாஷ் கூறியதாவது:

“வடகிழக்கு பருவமழைக் காலம் நெருங்கி வருவதாலும், தற்போது நிலவும் பருவ நிலை மாற்றம் காரணமாக கனமழை, இடியுடன் கூடிய மழை, பலத்த காற்று ஆகியவற்றால் உயிர், உடைமை மற்றும் பொது உள்கட்டமைப்புகளுக்கு ஏற்படிக்கூடிய அபாயங்களைக் குறைப்பதற்கும் முன்கூட்டியே தயார்நிலை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்க வேண்டியது அவசியமாகின்றது.

உரிய பாதுகாப்பற்ற விளம்பரப் பலகைகள் மற்றும் வளை வுகள், மோசமான வானிலை மற்றும் பேரிடர் காலங் களில் உயிர் சேதங்களை ஏற்படுத்தும் அபாயம் அரசுக்கு பெரும் சவாலாகவும், அச்சுறுத்தலாகவும் இருக்கிறது.

எனவே, திருத்தப்பட்ட 2005-ம் ஆண்டு பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் வழிகாட்டுதலின்படி தற்காப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட இருக்கிறது.

அதன்படி பேனர், கட்-அவுட்கள், விளம்பரப் பலகைள், பிளெக் ஸ் போர்டுகள், வளைவுகள் உள்ளிட்டவை எந்தவொரு பொது அல்லது தனியார் சொத்து, சாலை ஓரங்கள் மற்றும் சாலைப் பிரிப்பான்களில் வைப்பது தடை செய்யப்பட்டுள்ளது.

தற்போதுள்ள அனைத்து பேனர்கள், கட்-அவுட்கள், விளம்பரப் பலகைள் உள்ளிட்டவை உடனடியாக முற்றிலுமாக அகற்றப்பட உள்ளன.

செப்.28 அன்று புதுச்சேரி அரசு, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் உத்தரவின்படி, எந்த ஒரு தனி நபரோ, அரசியல் கட்சிகளோ, நிறுவனங்களோ, அரசு அமைப்புகளோ விளம்பரப் பலகைள், வளைவுகள் மற்றும் எந்தவிதமான தற்காலிக காட்சிப் பொருட்களை அமைப்பது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது” என காரைக்கால் நகராட்சி ஆணையர் தெரிவித்தார்.

இதனிடையே, கடந்த செப்.25-ம் தேதி, பாரதிய ஜன சங்கத்தின் தலைவராக இருந்த பண்டிட் தீனதயாள் உபாத்யாயாவின் பிறந்த நாளை முன்னிட்டு, பாஜக சார்பில் காரைக்கால் புதிய பேருந்து நிலையம் அருகே ஷாமியானா பந்தல் அமைத்து, அவரது உருவப்படம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது.

இந்நிலையில் அந்தப் பகுதியில் அதிக அளவில் டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளதாக புகார்கள் வந்துள்ளதாக கூறி நகராட்சி ஊழியர்கள் அன்று மாலை பந்தலையும், படத்தையும் அகற்றினர்.

மேலும் அருகில் புளியங்கொட்டை சாலைப் பகுதியில், பாஜக எம்எல்ஏ மீனாட்சி சுந்தரம் சார்பில் தனியார் இடத்தில், பிரதமர் மோடியின் 25 ஆண்டு கால சாதனைகளை நினைவு கூரும் வகையில் வைக்கப்பட்டிருந்த பேனரையும் அகற்றினர்.

இதையடுத்து நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்தும், நகராட்சி ஆணையருக்கு எதிராகவும், அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் பாஜக சார்பில் நேற்று(செப்.29) மாலை ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *