அரசியல் காரணங்க ளுக்காக ஒரு பெண்ணின் கண்ணீரை தவறாகச் சித்தரிப்பது வேதனை அளிக்கிறது – அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்

சென்னை:
தாராபுரத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது ஏற்பட்ட சர்ச்சை குறித்து விளக்கம் அளித்துள்ள பள்ளிக்கல் வித் துறை அமைச்சர் ராஜ்மோகன், அரசியல் காரணங் களுக்காக ஒரு பெண்ணின் கண்ணீரை தவறாகச் சித்தரிப்பது மிகுந்த வேதனை அளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “முதல்வர் கலந்து கொண்ட தாராபுரம் பிராச்சாரத்தில் வேட்பாளர் சத்தியபாமாவிடம், “காலையில் இருந்து பொதுமக்கள் காத்திருக்கிறார்கள்.

விஜய்யும் காத்திருக்கிறார். விரைவாகப் பேசி முடித்துக்கொள்ளுங்கள்” என்று மட்டுமே சொன்னேன்.

அரசியல் காரணங்களுக்காக ஒரு பெண்ணின் கண்ணீரை தவறாகச் சித்தரிப்பது வேதனை அளிக்கிறது. அடிப்படை ஆதாரம் இல்லாமல் இப்படிப் பேசுவதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

அருண்ராஜ் பேசும்போதே நேரம் இல்லை என ஏற்பாட்டா ளர்கள் என்னிடம் கூறினார்கள்; அது போல தான் சத்தியபாமா பேசும் போதும் என்னிடம் கூறினார்கள்.

என் தாயின் மீது சத்தியமாக கூறுகிறேன், வெயிலில் மக்கள் காத்திருந்ததால், சீக்கிரம் முடிக்குமாறு தான் கூறினேன். இடைத்தேர்தலில் தவெக வெற்றி பெறும் என்பது உறுதி.

தவெக கூட்டணி, மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி. இந்தக் கூட்டணியில் இணைவது குறித்து, தவெக தலைவர் விஜய் மற்றும் கூட்டணி தலைவர்கள் கூடிப் பேசித் தான், முடிவு எடுப்பார்கள்” இவ்வாறு அவர் பேசினார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *