திருப்​பதி ஏழுமலையானை தரிசிக்க அலைமோதும் பக்தர்கள் – சுவாமி தரிசனம் செய்ய 30 மணி நேரம் காத்திருப்பு!!

திருமலை:
புரட்​டாசி மாதத்​தில் திருப்​பதி ஏழுமலையானை தரிசிக்க பக்​தர்​களின் கூட்​டம் அலைமோதுகிறது.

இதனால் சுவாமியை சர்வ தரிசனத்​தின் வாயி​லாக தரிசிக்க சுமார் 30 மணி நேரம் வரை ஆகிறது. புரட்டாசி மாத 3-வது சனிக்​கிழமை, காந்தி ஜெயந்தி, வார விடு​முறை காரண​மாக ஏழு​மலை​யானை தரிசிக்க பக்​தர்​கள் திருமலைக்கு குவிந்த வண்​ணம் உள்​ளனர்.

திருப்​பதி பேருந்து நிலை​யம், ரயில் நிலை​யம் முதற்​கொண்​டு, திருப்​ப​தி​யில் உள்ள தேவஸ்​தான சத்​திரங்​கள், கோயில்​கள், மலைப்​பாதைகள், அன்​ன​தானக் கூடம், தலை​முடி காணிக்கை செலுத்​து​மிடம், லட்டு பிர​சாதம் விநி​யோக மையம், தங்​கும் அறை​கள் வழங்​குமிடம், தரிசனங்​களுக்கு செல்​லும் அனைத்து மார்க்​கங்​களி​லும் பக்​தர்​கள் சாரை, சாரை​யாக செல்வதைக் காண முடிகிறது.

திரண்டு வரும் சாமானிய பக்​தர்​களுக்​காக திருப்​பதி தேவஸ்​தானம் விஐபி பிரேக் தரிசனம், இதர சிறப்பு தரிசன முறை​களை ரத்து செய்​தா​லும், கட்​டுக்​கடங்​காமல் பக்​தர்​கள் திரு​மலை நோக்கி வந்த வண்​ணம் உள்​ளனர்.

இதனால் சர்வ தரிசனத்திற்கு நேற்று 30 மணி நேரம் வரை ஆனதாக பக்​தர்​கள் தெரி​வித்​தனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *