ஆசிய விளையாட்டில் ஆடவர் கிரிக்கெட் போட்டியின் அரை இறுதியில் நேற்று இந்தியா – இலங்கை அணிகள் மோதின. முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 169 ரன்கள் குவித்தது. இஷான் கிஷன் அதிரடியாக விளையாடி 46 பந்துகளில், 5 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 80 ரன்கள் விளாசினார்.
வைபவ் சூர்யவன்ஷி 21 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 38 ரன்களும், கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் 13 ரன்களும் சேர்த்தனர். அபிஷேக் சர்மா 7, சஞ்சு சாம்சன் 7, அக்சர் படேல் 8, திலக் வர்மா 2, ஷிவம் துபே 3 ரன்களில் நடையை கட்டினர்.
170 ரன்கள் இலக்குடன் பேட் செய்த இலங்கை அணி 9.5 ஓவர்களில் 45 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக நுவனிந்து பெர்னாண்டோ 15 ரன்கள் சேர்த்தார். மற்ற எந்த பேட்டரும் இரட்டை இலக்க ரன்னை எட்டவில்லை.
இந்திய அணி தரப்பில் ஜஸ்பிரீத் பும்ரா, அக்சர் படேல், அபிஷேக் சர்மா ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர். 124 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
இறுதிப் போட்டியில் இந்திய அணி நாளை (3-ம் தேதி) பாகிஸ்தானுடன் மோதுகிறது.இலங்கை அணிக்கு எதிரான அரை இறுதி ஆட்டத்தில் அதிரடியாக விளையாடிய இஷான் கிஷன்.