காந்தி ஜெயந்தி மற்றும் காமராஜரின் நினைவு தினத்தை முன்னிட்டு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் மரியாதை!!

சென்னை:
காந்தி ஜெயந்தி மற்றும் காமராஜரின் நினைவு தினத்தை முன்னிட்டு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் மற்றும் கட்சியினர் மரியாதை செலுத்தினர்.

இது குறித்து அக்கட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அக்.02 இன்று காலை மகாத்மா காந்தியின் “157-வது பிறந்தநாளை” முன்னிட்டு எழும்பூர் அருங்காட்சியகத்தில் அமைந்துள்ள மகாத்மா காந்தியின் திருவுருவ சிலைக்கு அருகில் உள்ள படத்திற்கு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் மலர் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

மேலும், காலை 10.30 மணியளவில் பெருந்தலைவர் காமராஜரின் 51-வது நினைவு நாளை முன்னிட்டு கிண்டியில் அமைந்துள்ள நினைவிடத்தில் ஜி.கே.வாசன் மலர் அஞ்சலி செலுத்தினார்.

இந்நிகழ்வின் போது தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள், மாநில துணை அமைப்பு தலைவர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் உடன் பலர் கலந்துகொண்டனர்.” என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *