திருப்பதியில் நேற்று 90, 292 பேர் தரிசனம்!!

திருப்பதி ;

திருப்பதி ஏழுமலையான் கோவிவில் புரட்டாசி மாதம் என்பதால் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனத்திற்கு வந்து செல்கின்றனர். பள்ளி விடுமுறை காரணமாக கோவிலில் கூட்டம் அலைமோதியது.

பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் வந்ததால் கடந்த சில நாட்களாக 30 மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்து வந்தனர்.

சாதாரண பக்தர்களும் விரைந்து தரிசனம் செய்வதற்காக கடந்த 1-ந் தேதி முதல் இன்று வரை வி.ஐ.பி பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டது.

நேற்று முதல் தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை குறைந்து காணப்பட்டது. இதனால் நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 8 மணி நேரத்தில் தரிசனம் செய்ததால் மகிழ்ச்சி அடைந்தனர்.

திருப்பதியில் நேற்று 90, 292 பேர் தரிசனம் செய்தனர். 27,329 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.61 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. 4.36 லட்சம் லட்டுகள் விற்பனையானது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *