தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரை ரயில் நிலையம் நோக்கி வந்துகொண்டிருந்த மின்சார ரயில் தடம் புரண்டு விபத்து: ரயில் சேவை பாதிப்பு!!

சென்னை:
தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரை ரயில் நிலையம் நோக்கி வந்துகொண்டிருந்த மின்சார ரயில், சென்னை கோட்டை ரயில் நிலையத்தில் தடம் புரண்டது.

தாம்பரத்தில் இருந்து கடற்கரை நோக்கி இயக்கப்பட்ட புறநகர் மின்சார ரயில், சென்னை கோட்டை ரயில் நிலையம் அருகே தடம் புரண்டது. ரயிலின் ஒரு பெட்டி மட்டும் தண்டவாளத்தைவிட்டு விலகி தடம் புரண்டது. இதனால், கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து தாம்பரம் நோக்கிச் செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

விபத்து மீட்பு ரயிலை வரவழைத்து தடம்புரண்ட பெட்டியை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்தச் சூழலில், ரயிலின் பெட்டி தடம் புரண்டு முக்கிய வழித்தடத்தில் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டதால் பயணிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

ரயிலின் பெட்டியைத் தண்டவாளத்தில் நிறுத்தி சரி செய்யும் பணிகளில் தெற்கு ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். அதுவரை தாம்பரம், செங்கல்பட்டு செல்லும் அனைத்து ரயில்களும் பூங்கா ரயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *