தாராபுரத்தில் 100 சதவீதம் இரட்டை இலை ஜெயிக்கும் – அதிமுக வேட்பாளர் பானுமதி!!

தாராபுரம்:
“இந்த இடைத்தேர்தலே தேவையில்லாதது என மக்கள் நினைக்கிறார்கள். யார் எவ்வளவு பணம் கொடுத்தாலும், மக்கள் தெளிவாக இரட்டை இலைக்கே வாக்களிப்பார்கள்.

100 சதவீதம் இரட்டை இலை ஜெயிக்கும்” என அதிமுக வேட்பாளர் பானுமதி தெரிவித்துள்ளார்.

மது​ராந்​தகம், தாராபுரம் ஆகிய தொகு​தி​களில் இடைத்​தேர்​தல் வாக்​குப்​ப​திவு இன்று காலை 7 மணி தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த வாக்குப் பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்​ளது. தொடர்ந்து வாக்​கு​கள் வரும் 9-ம் தேதி எண்ணப்​பட்டு முடிவு​கள் அறிவிக்​கப்பட உள்​ளன.

தாராபுரம் தொகுதியில் தவெக சார்பில் சத்யபாமா போட்டியிடுகிறார். திமுக சார்பில் சுகன்யாவும், அதிமுக சார்பில் பானுமதியும், நாதக சார்பில் கார்த்திகாவும், இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் லட்சுமணனும் தாராபுரத்தில் போட்டியிடுகின்றனர்.

இன்று வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடக்கும் நிலையில், அதிமுக வேட்பாளர் பானுமதி தனது வாக்கினை பதிவு செய்தார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ மக்கள் ஆர்வமாக மிக ஆர்வமாக வாக்களித்து வருகின்றனர். எங்களுக்கும் மிக உற்சாகமாக உள்ளது. 100 சதவீதம் இரட்டை இலை ஜெயிக்கும்.

இந்த இடைத்தேர்தலே தேவையில்லாதது என மக்கள் நினைக்கிறார்கள். ஏற்கெனவே இரட்டை இலைக்கு வாக்களித்து, அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் வேண்டும் என்றுதான் வாக்களித்தனர்.

அவர்கள் மாற்றுக்கட்சிக்கு சென்றாலும், மீண்டும் இரட்டை இலைக்கே வாக்களிப்பார்கள். தவெகவுக்கு சென்ற வேட்பாளர்கள் மேல் உள்ள கோபத்தில் மக்கள் இரட்டை இலைக்கே வாக்களிப்பார்கள்.

யார் எவ்வளவு பணம் கொடுத்தாலும், மக்கள் தெளிவாக இரட்டை இலைக்கே வாக்களிப்பார்கள். குறைந்தது 30 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்” என்றார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *