எ​திர்க்​கட்​சித் தலை​வர் உதயநிதி ஸ்டா​லின் மீது வழக்குப் போடும் காவல் துறையின் கண்​களுக்​கு, மாட்டு வண்டியில் முதல்வருடன் இருந்த தேடப்படும் குற்றவாளி தெரியவில்​லை​யா? ஆர்​.எஸ்​.​பாரதி கேள்வி!!

சென்னை:
எ​திர்க்​கட்​சித் தலை​வர் உதயநிதி ஸ்டா​லின் மீது வழக்குப் போடும் காவல்துறையின் கண்​களுக்​கு, மாட்டு வண்டியில் முதல்வருடன் இருந்த தேடப்படும் குற்றவாளி தெரியவில்​லை​யா? என்று திமுக அமைப்​புச் செய​லா​ளர் ஆர்​.எஸ்​.​பாரதி கேள்வி எழுப்பி உள்​ளார்.

இதுகுறித்து அண்ணா அறி​வால​யத்​தில் அவர் செய்தியாளர் களிடம் கூறிய​தாவது: தாராபுரத்​தில் விஜய், மாட்டு வண்​டி​யில் பயணம் செய்​தார்.

அப்​போது அசோக் என்​பவர்​தான் மாட்டு வண்​டியை ஓட்​டு​கிறார். அவர் தவெக​வின​ரால் புகார் கொடுக்​கப்​பட்​டுள்ள ஒரு தேடப்​படும் குற்​ற​வாளி. இது காவல்​துறை​யினருக்கு தெரி​யா​தா?

உதயநிதி மீது வழக்​குப்​ப​திவு செய்த காவல்துறை​யின் கண்களுக்​கு, தேடப்​படும் குற்​ற​வாளி முதல்வருடன் இருப்​பது தெரிய​வில்​லை​யா? சட்​டம், ஒழுங்கு எங்கே செல்​கிறது?

முதல்​வரே குற்​றவாளியை காப்பாற்றுகிறாரா? அமைச்​சர் கீர்த்​தனா பள்ளிக்கூடக் குழந்தைகளைப் பிரச்​சா​ரத்​திற்கு அழைத்து வந்​திருக்கிறார்.

அவர் மீது என்ன நடவடிக்கை எடுத்​தீர்​கள்? எதிர்க்​கட்​சித் தலைவரைப் பார்த்து ஏன் பயப்​படு​கிறீர்​கள்?

எதற்​காக அவசர அவசரமாக வழக்​குப் போடு​கிறீர்​கள்? கடந்த 4 மாதங்​களாக இந்த அரசு பல கட்சி எம்​எல்​ஏக்​களை விலைக்கு வாங்கி இருக்​கிறது.

ஆனால் திமுக உறுப்​பினர்​கள் ஒரு​வரைக்​கூட அவர்​களால் தொட்டுப் பார்க்க முடிய​வில்​லை.

திருப்​பதி திருக்​குடை ஊர்வலத்தி​லும் பெண் காவலருக்கு தொல்​லை கொடுக்கப்பட்டுள்ளது.

சிங்​கப்​பெண்​ படை எங்​கே செல்​கிறது? இவ்​​வாறு அவர்​ கேள்​வி எழுப்​பி​னார்​.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *