புதுடெல்லி:
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான 5 மூத்த நீதிபதிகளைக் கொண்ட கொலீஜியம் குழு கூட்டம் கடந்த மாதம் 28-ம் தேதி நடைபெற்றது.
கூட்டத்தில், 3 உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகளை உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்யப்பட்டது.
குஜராத் உயா் நீதிமன்ற தலைமை நீதிபதி சுனிதா அகா்வால் டெல்லி உயா் நீதிமன்ற தலைமை நீதிபதி தேவேந்திர குமாா் உபாத்யாய, தெலங்கானா உயா் நீதிமன்ற தலைமை நீதிபதி அபரேஷ் குமாா் சிங் ஆகியோரின் பெயா்கள் உச்ச நீதிமன்ற நீதிபதி பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டன.
கொலீஜியத்தின் இந்த பரிந்துரையை ஏற்று, உச்ச நீதிமன்றத்துக்கு 3 புதிய நீதிபதிகளை நியமிக்க குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதல் வழங்கினார்.
இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை மத்திய அரசு நேற்று வெளியிட்டது. நீதித்துறை வெளியிட்ட அறிவிப்பின்படி, புதிதாக நியமிக்கப்பட்ட 3 நீதிபதிகளும் விரைவில் பதவியேற்றுக் கொள்வார்கள்.
அவர்களுக்கு தலைமை நீதிபதி சூர்ய காந்த் பதவிப் பிரமாணம் செய்து வைப்பார்.
தற்போது உச்ச நீதிமன்றத்தில் 34 நீதிபதிகள் பணியாற்றும் நிலையில், புதிய நீதிபதிகள் பதவியேற்றவுடன் நீதிபதிகளின் மொத்த எண்ணிக்கை 37 ஆக உயரும்.