தேர்தலுக்கு முன்பு அள்ளித் தெளித்த வாக்குறுதிகளை, தவெக அரசு கண்டு கொள்வதாக தெரியவில்லை; கனிமொழி எம்.பி. குற்றச்சாட்டு!!

கோவில்பட்டி:
தேர்தலுக்கு முன்பு அள்ளித் தெளித்த வாக்குறுதிகளை, தவெக அரசு கண்டுகொள்வதாக தெரியவில்லை என திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்தார்.

தூத்துக்குடி மாவட்டம் கீழஈராலில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது:

சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பு முதல்வர் விஜய் வாக்குறுதிகளை அள்ளி வீசினார்.

ஆனால், விவசாயிகள், உழைக்கும் மக்கள், செவிலியர்கள் என யாருக்கெல்லாம் வாக்குறுதிகளை கொடுத்தார்களோ, தேர்தலுக்குப் பிறகு அவற்றை அவர்கள் கண்டுகொள்வதாக தெரியவில்லை.

தங்களுடைய நியாயத்துக்காக போராடும் செவிலியர்களை கைது செய்திருக்கின்றனர்.

அத்துடன் கன்னியாகுமரி மாவட்ட திமுக செயலாளர் மனோ தங்கராஜையும் இந்த அரசு கைது செய்து அடைத்து வைத்திருந்தது.

இரவில்தான் அவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ஆனால், செவிலியர்களின் கோரிக்கைகள் இன்னும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பிறகு என்ன வேண்டுமென்றாலும் செய்யலாம், எங்களை கேள்வி கேட்பதற்கு ஆள் இல்லை என்ற மமதையில் நடந்து கொள்கிறார்களா என்று தெரியவில்லை.

ஒவ்வொரு நாளும் கொலை சம்பவங்கள், பெண்கள், குழந்தை கள் மீதான பாலியல் கொடுமைகள் நடந்து கொண்டிரு க்கின்றன.

அதை இந்த அரசு சரி செய்வதாக தெரியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *