பட்​டினப்​பாக்​கத்​தில் புதிய தலை​மைச் செயல​கம் அமைப்​ப​தற்​காக தேர்வு செய்​யப்​பட்ட 21.37 ஏக்​கர் நிலத்தை குடியிருப்பு பிரி​வில் இருந்து வணிக பயன்​பாட்​டுக்கு மாற்றுவதற்கு சிஎம்​டிஏ ஒப்​புதல்!!

சென்னை:
பட்​டினப்​பாக்​கத்​தில் புதிய தலை​மைச் செயல​கம் அமைப்​ப​தற்​காக தேர்வு செய்​யப்​பட்ட 21.37 ஏக்​கர் நிலத்தை குடியிருப்பு பிரி​வில் இருந்து வணிக பயன்​பாட்​டுக்கு மாற்றுவதற்கு சிஎம்​டிஏ ஒப்​புதல் அளித்​துள்​ளது.

பட்​டினப்​பாக்​கத்​தில் ரூ.1,200 கோடி​யில் புதிய தலை​மைச்​செயலகம் கட்​டு​வதற்கு முடிவு செய்து தமிழக அரசு அறி​விப்பு வெளி​யிட்​டது.

இதற்​காக பட்டினப்​பாக்​கத்​தில் தமிழ்​நாடு வீட்டுவசதி வாரி​யம், சென்னை மாநக​ராட்சி மற்​றும் வரு​வாய்த் துறைக்​குச் சொந்​த​மான 25.55 ஏக்​கர் நிலம் தேர்வு செய்யப்பட்டுள்​ளது.

இந்த நிலத்​தில் ஒரு பகுதி குடி​யிருப்​புப் பயன்​பாட்​டுக்​கும், ஒரு பகுதி நிறு​வனப் பயன்​பாட்​டுக்​கும், மற்றொரு பகுதி திறந்​தவெளி மற்​றும் பொழுது​போக்கு பயன்பாட்டுக்​கும் வகைப்​படுத்​தப்​பட்​டிருந்​தது.

இந்த நிலத்தை வணி​கப் பயன்​பாட்​டுக்​கான வகைப்​பாட்​டுக்கு மாற்​றக்​கோரி தமிழ்​நாடு வீட்​டு​வசதி வாரி​யம் சார்​பில் சென் னை பெருநகர வளர்ச்​சிக் குழு​மத்​திடம் (சிஎம்​டிஏ) விண்ணப்பிக்கப்பட்டது.

இது​சார்ந்து பொது​மக்​கள் கருத்து தெரிவிக்க 21 நாட்​கள் கால அவகாசம் வழங்​கப்​பட்​டது.

அந்த அவகாசம் முடிந்த நிலை​யில், கடந்த அக்​.1-ல் சிஎம்​டிஏ அலுவலகத்​தில் தொழில் நுட்​பக் கமிட்​டிக் கூட்​டம் நடை​பெற்​றது.

அதில், பட்​டினப்​பாக்​கம் நில வகைப்​பாடு மாற்ற கோப்​பு​களை, குழும கூட்​டத்​துக்கு பரிந்​துரைக்க முடிவு செய்​யப்​பட்​டது.

இதையடுத்து சிஎம்​டிஏ​வின் 289-வது குழு​மக் கூட்​டம் நேற்று முன்தினம் நடை​பெற்​றது.

அதில் பட்​டினப்​பாக்​கத்​தில் அமைய வுள்ள புதிய தலை​மைச் செயலக திட்​டத்​துக்​காக தேர்வு செய்​யப்​பட்ட 25.55 ஏக்​கரில், 21.37 ஏக்​கர் நிலங்​களின் வகைப் பாட்டை மட்​டும் மாற்ற ஒப்​புதல் அளிக்​கப்​பட்​டுள்​ளது.

இந்தக் கூட்​டத்​தில், புதிய தலை​மைச் செயலக திட்​டம் உள்பட 44 இடங்​களில் நில வகைப்​பாடு மாற்ற ஒப்​புதல் அளிக்கப் பட்டுள்ளது.

இத்​துடன்​, நிர்​​வாக நடை​முறை தொடர்​​பான 28 கோப்​பு​களுக்​கும்​ ஒப்​புதல்​ அளிக்​கப்​பட்​ட​தாக சிஎம்​டிஏ அதிகாரி​கள்​ தெரிவித்​தனர்​.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *