ஐபிஎல் கிரிக்கெட் அணிகளில் ஒன்றான டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக சவுரவ் கங்குலி நியமனம்!!

புதுடெல்லி:
ஐபிஎல் கிரிக்கெட் அணிகளில் ஒன்றான டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக சவுரவ் கங்குலி நியமிக்கப்பட்டுள்ளார். இது குறித்த அறிவிப்பு அதிகாரபூர் வமாக வெளியாகி உள்ளது.

அடுத்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் சீசனில் டெல்லி அணியின் பயிற்சியாளராக 54 வயதான கங்குலி செயல்பட உள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான கங்குலி, இதற்கு முன்பு டெல்லி அணியின் ஆலோசகராக சில ஆண்டுகள் செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.

டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் பல்வேறு தலைமை பொறுப்புகளை அவர் கவனித்ததும் உண்டு. இந்நிலையில், அணியின் தலைமை பயிற்சியாளராக இப்போது அறிவிக்கப்பட்டுள்ளார்.

“ஐபிஎல் கிரிக்கெட்டில் டெல்லி அணியின் பயிற்சியாளராக பணியாற்றும் இந்த வாய்ப்பை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளேன்.

டெல்லி அணி எனது மனதுக்கு மிகவும் நெருக்கமானது. பல ஆண்டுகளாக இந்த அணி உடன் பயணிக்கிறேன்.

எதிர்வரும் சீசனில் வலுவான அணியை உருவாக்க விரும்புகிறேன். அதற்காக அணியினருடன் இணைந்து பணியாற்ற தயாராக உள்ளேன்.

அணியின் உரிமையாளர்கள், நிர்வாகிகள், வீரர்கள் உடன் பணியாற்றிய அனுபவம் எனக்கு உள்ளது. அதனால் இந்த பொறுப்பு எனக்கு ஆர்வத்தை தருகிறது.

எங்கள் அணி சிறந்த கிரிக்கெட் விளையாடுகிறது. திறமைசாலிகள் அதிகம் அணியில் உள்ளனர்” என்று கங்குலி தெரிவித்தார்.

ஐபிஎல் கிரிக்கெட்டில் இதுவரை பட்டம் வெல்லாத அணிகளில் ஒன்றாக டெல்லி கேப்பிடல்ஸ் உள்ளது. கடந்த 2020 சீசனில் அந்த அணி இரண்டாம் இடம் பிடித்தது.

இந்த சூழலில் எதிர்வரும் சீசனை முன்னிட்டு பயிற்சியாளர் குழுவில் மாற்றங்களை மேற்கொண்டுள்ளது. டெல்லி அணியில் ரிஷப் பந்த் மீண்டும் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *