பிரதமர் நரேந்​திர மோடியைப் பாராட்டி மத்​திய அமைச்​சரவை தீர்​மானம் !!

புதுடெல்லி:
குஜ​ராத் முதல்​வர், பிரதமர் என கடந்த 25 ஆண்டுகளாக தொடர்ந்து பொதுச் சேவை செய்து வரும் பிரதமர் நரேந்​திர மோடியைப் பாராட்டி மத்​திய அமைச்​சரவை தீர்​மானம் நிறைவேற்றி உள்​ளது.

டெல்​லி​யில் பிரதமர் நரேந்திர மோடி தலைமை​யில் மத்​திய அமைச்​சரவை நேற்று கூடியது.

இதுகுறித்து மத்​திய அமைச்​சர் அஸ்​வினி வைஷ்ணவ் கூறிய​தாவது: கடந்த 25 ஆண்​டு​களாக குஜ​ராத்​தின் முதல்​வ​ராக​வும், பிரதம​ராக​வும் மோடி ஆற்​றிய சாதனை​களை மத்​திய அமைச்​சரவை பாராட்டி தீர்​மானம் இயற்​றி​யுள்​ளது. ‘தேசத்​துக்கு முன்​னுரிமை.. குடிமக்​களுக்கு முன்​னுரிமை’ என்ற கொள்​கை​யால் வழிநடத்​தப்​பட்ட பிரதமர் மோடி​யின் அசா​தாரண பயணத்​தைக் கொண்​டாடு​கிறது.

குஜ​ராத்​தில் 3 முறை பெற்ற மகத்​தான வெற்​றிகளும், அடுத்​தடுத்து நடந்த மூன்று மக்​கள​வைத் தேர்​தல்​களில் கிடைத்த ஆதர​வும், பிரதமர் மோடி மீது மக்​கள் வைத்​துள்ள நீடித்த நம்​பிக்​கையை பிர​திபலிக்​கின்​றன.

நாட்​டின் மீதான வளர்ச்​சிப் பார்​வை, 25 கோடி மக்​களை வறுமைக் கோட்​டிலிருந்து அகற்​றியது, சமூகத்​துக்கு அதி​காரமளித்​தல், தற்​சார்பு இந்​தி​யா​வுக்​கான அடித்​தளங்​களை உரு​வாக்​குதல், குடிமக்​களுக்கு சேவை செய்ய உயரிய தொழில்​நுட்​பம், பதற்​ற​மான காலங்​களில் உறு​தி​யான தலை​மை, நக்​சல்​களுக்கு எதி​ரான தீவிர நடவடிக்​கைகள், உலக அரங்​கில் இந்​தி​யா​வின் குரலை வலுப்​பெறச் செய்​தது, 2047-ம் ஆண்​டுக்​குள் வளமான, தன்​னிறைவு பெற்ற மற்​றும் வளர்ந்த இந்​தி​யாவை நோக்​கிய கூட்டு முயற்சி என்ற பிரதமரின் தொலைநோக்​குப் பார்வை ஆகிய 10 அம்​சங்​களைப் பாராட்டி அமைச்​சர​வை​யில் தீர்​மானம் நிறைவேற்​றப்​பட்​டது.

கடந்த 12 ஆண்​டு​களில்​ பிரதமர்​ பல சீர்​திருத்​தங்​களை அறி​முகப்​படுத்​தி​யுள்​ளார்​. இவ்​​வாறு அவர்​ தெரி​வித்​​தார்​.

ரூ.10,000 கோடி எஸ்எம்இ வளர்ச்சி நிதி

சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு (எஸ்எம்இ) நீண்டகால பங்கு மூலதனத்தை வழங்குவதையும், உலக அளவில் போட்டியிடக்கூடிய புதிய தலைமுறை இந்திய நிறுவனங் களை உருவாக்க உதவுவதையும் நோக்கமாகக் கொண்டு, எஸ்எம்இ வளர்ச்சி நிதியை அமைக்க ரூ.10,000 கோடி வழங்க மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் வழங்கியது.

நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட இந்த நிதியானது, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களில் நேரடிப் பங்கு முதலீடுகளை மேற்கொள்ளும் என்று தெரியவந்துள்ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *