ஆசிய விளையாட்டுப் போட்டியில் மூன்று பதக்கங்கள் வென்ற வித்யா ராம்ராஜை நேரில் அழைத்து நடிகர் தனுஷ் பாராட்டு!!

சென்னை,
ஆசிய விளையாட்டுப் போட்டியில் மூன்று பதக்கங்கள் வென்ற வித்யா ராம்ராஜை நேரில் அழைத்து நடிகர் தனுஷ் பாராட்டு தெரிவித்துள்ளார்.

ஜப்பானில் நடந்து முடிந்த 20-வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜ் மகளிருக்​கான 4×400 மீட்​டர் தொடர் ஓட்​டப் போட்​டி​யின் இறு​திச் ​சுற்​றின் இறு​திப் பகுதி​யில் அபார​மாக ஓடி தங்​கம் வெல்லும் இந்​தி​யா​வின் கனவை நனவாக்​கி​னார்.

அதேபோல் கலப்பு 4×400 மீட்​டர் தொடர் ஓட்​டப் போட்​டி​யில் வெள்​ளிப் பதக்​கம் வென்​றிருந்தவர், 400 மீட்​டர் தடை ஓட்டத்​தில் 54.75 விநாடிகளில் இலக்​கைக் கடந்து வெண்கலம் வென்​றதுடன், ஜாம்ப​வான் பி.டி. உஷா​வின் 42 ஆண்​டு​கால தேசிய சாதனையை முறியடித்திருந்தார்.

இந்தநிலையில், இவர் அக்டோபர் 3-ம் தேதி சொந்த ஊரான கோவைக்கு திரும்பினார்.

ஆசிய விளையாட்டு போட்டியில் சாதனை படைத்து திரும்பி இருக்கும் தடகள வீராங்கனை வித்யாவை அரசியல் தலைவர்கள் பாராட்டி வரும் நிலையில், தற்போது நடிகர் தனுஷ், அவரை நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்துள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *