ஒரு​நாள் பயண​மாக அக்​.11-ம் தேதி சென்னை வரும் பிரதமர் மோடி!!

சென்னை:
ஒரு​நாள் பயண​மாக அக்​.11-ம் தேதி சென்னை வரும் பிரதமர் மோடி, பூந்​தமல்லி – வடபழனி இடையி​லான மெட்ரோ ரயில் சேவையை தொடங்கி வைப்​பதுடன் பல்​வேறு நிகழ்ச்சிகளில் பங்​கேற்​கி​றார்.

பிரதமர் நரேந்​திர மோடி அக்​.11-ம் தேதி சென்னை வரு​கி​றார். சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்ட திட்​டப்​பணி​களின் ஒரு பகு​தியாக நிறைவடைந்​துள்ள பூந்​தமல்லி – வடபழனி வரையி​லான 14.64 கி.மீ. தொலைவி​லான மெட்ரோ ரயில் சேவையைத் தொடங்கி வைக்​கி​றார்.

பூந்​தமல்லி மெட்ரோ நிலை​யத்​தில் நடை​பெறும் நிகழ்​வுக்​குப் பிறகு, பிரதமர் மோடி​யும், முதல்​வர் விஜய்​யும் பூந்​தமல்​லி​யில் இருந்து போரூர் வரை மெட்ரோ ரயி​லில் இணைந்து பயணம் செய்​கின்​ற​னர்.

தமிழக முதல்​வ​ராக விஜய் பொறுப்​பேற்ற பிறகு, பிரதமருடன் இணைந்து பங்​கேற்​கும் முதல் அரசு நிகழ்ச்சி இது​வாகும்.

இதைத்​தொடர்ந்​து, போரூர் மெட்ரோ ரயில் நிலை​யத்​தில் இருந்து கார் மூல​மாக சென்னை ஐஐடி வளாகத்​துக்கு செல்​கி​றார்.

அங்கு புதி​தாக அமைக்​கப்​பட்​டுள்ள மூளை ஆராய்ச்சி மையத்​தைப் பார்​வை​யிடு​கி​றார்.

மேலும், ஐஐடி-​யில் இயங்கி வரும் 10-க்​கும் மேற்​பட்ட முன்​னணி ஸ்டார்ட்​-அப் நிறு​வனங்​களின் நிறு​வனர்​களை சந்​தித்து கலந்​துரை​யாடு​கி​றார்.

இதுத​விர, மாற்​றுத்​திற​னாளி குழந்​தைகளு​டன் கலந்​துரை​யாடு​கி​றார்.

பின்னர், ‘இசை​ஞானி இளை​ய​ராஜா இசை கற்​றல் மற்​றும் ஆராய்ச்சி மையத்​தை’ பிரதமர் திறந்து வைக்​கி​றார்.

அங்கு நடை​பெறும் அரசு நிகழ்​வில், பல்​வேறு தேசிய நெடுஞ்​சாலை திட்​டங்​களை நாட்​டுக்கு அர்ப்​பணித்​து, புதிய திட்​டப் பணி​களுக்​கும் அடிக்​கல் நாட்​டு​கி​றார்.

மேலும் 3 தேசிய நெடுஞ்​சாலை திட்​டப் பணி​கள், இந்​தியன் ஆயில் கார்ப்​பரேஷன் திட்​டங்​களை தொடங்கி வைக்​கி​றார்.

‘அம்​ரித் பாரத்’ திட்​டத்​தின்​கீழ், தெற்கு ரயில்​வே​யில், மேம்​படுத்​தப்​பட்ட பழநி, பரமக்​குடி, நாமக்​கல், அம்​பாச​முத்​திரம், வேலுார் கன்​டோன்​மென்ட் ரயில் நிலை​யங்​கள், கோவை பகு​தி​யில் 3 ரயில்வே மேம்​பாலங்​கள் மற்​றும் காரைக்​கால் – பேரளம் இடையே 23 கி.மீ. புதிய ரயில் பாதை என ரூ.700 கோடி மதிப்​பிலான திட்​டங்​களை​யும் பிரதமர் மோடி தொடங்கி வைக்​கி​றார்.

ஐஐடி நிகழ்​வு​களை முடித்​துக் கொண்​டு, நந்​தம்​பாக்​கம் வர்த்தக மையத்​தில் நடை​பெறும் ஜெய்​கோ​பால் கரோடியா இந்து வித்​யாலயா பள்​ளி​யின் பொன்​விழா​வில் பிரதமர் பங்​கேற்​கி​றார்.

அதில், பள்​ளி​யில் அமைக்​கப்​பட்​டுள்ள செயற்கை நுண்​ணறிவு ஆய்​வகத்தை காணொலி மூலம் திறந்​து​வைக்​கி​றார்.

இவ்​விழா​வில் பிரதமருடன் ஆளுநர் ஆர்​.​வி.ஆர்​லேகர், மத்​திய இணை​யமைச்​சர் எல்​.​முரு​கன், தமிழக பள்​ளிக் கல்​வித்​துறை அமைச்​சர் ராஜ்மோகன் உள்​ளிட்​டோர் பங்​கேற்​க​வுள்​ளனர்.

பிரதமரின் நிகழ்ச்​சி​யில் ஒரு பகு​தி​யாக, ஐஐடி​யில் உள்ள ஜலகண்​டேஸ்​வரர் கோயி​லில் சுவாமி தரிசனம் செய்ய திட்​ட​மிடப்​பட்​டுள்​ள​தாகக் கூறப்​படு​கிறது.

சென்​னை​யில் நிகழ்ச்​சிகளை முடித்​த​பின், மாலை​யில் ஹெலி​காப்​டர் மூலம் வேலூருக்​குச் சென்​று, அங்கு புதிய உள்​கட்​டமைப்​புத் திட்​டங்​கள் மற்​றும் வேலூர் விமான நிலை​யப் பணி​கள் உள்​ளிட்ட பல்​வேறு திட்​டங்​களுக்கு அடிக்​கல் நாட்ட உள்​ளார்.

பிரதமரின் வரு​கையை முன்​னிட்​டு பாதுகாப்பு குறித்து, தலைமைச் செயலர் சாய்​கு​மார் தலை​மை​யில் காவல்​துறை உயர் அதி​காரி​கள் கடந்த 5-ம் தேதி ஆலோ​சனை நடத்​தினர்.

பிரதமர் மோடி சென்னை விமான நிலை​யத்​தில் இருந்து கார் மூலம் போரூருக்​குச் செல்​லும் வழி​யில், விமான​நிலை​யத்​தில் இருந்து பரங்​கிமலை ராணுவ மைதானம் வரை ‘ரோடு ஷோ’ செல்கி​றார்.

இப்​பகு​தி​களில் செங்​கல்​பட்டு வடக்​கு, சென்னை கிழக்​கு, காஞ்​சி ஆகிய 3 மாவட்ட பாஜக நிர்​வாகி​கள், தொண்டர்கள் பிரதமருக்கு உற்​சாக வரவேற்பு அளிக்​க​வுள்​ளனர்.

அதே​போல், போரூர்​ நிகழ்​ச்​சியை முடித்​து கொண்​டு ​கார்​ மூலமாக சென்​னை ஐஐடி வரும்​ வழி​யில்​ சை​தாப்​பேட்​டை நீதி​மன்​றம் அரு​கில்​ இருந்​து அண்​ணா பல்​கலை. வரை பிரதமர்​ மோடி ‘ரோடு ஷோ’ செல்​கிறார்​.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *