மேட்டூர் அணையில் நீர்மட் டம் குறைவாக உள்ளதால் வெளியே தெரிந்த நந்தி சிலை!!

சேலம்,
மேட்டூர் அணையில் நீர்மட்டம் குறைவாக உள்ளதால் நந்தி சிலை வெளியே தெரிகிறது.

சேலம் மாவட்டம் மேட்டூர் அணை காவிரி டெல்டா மாவட்டங்களின் பாசன மற்றும் குடிநீர் ஆதாரமான மேட்டூர் அணை கட்டப்பட்ட போது, அங்கு வசித்த பொதுமக்கள் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டனர்.

இதையடுத்து அவர்கள் வழிபட்டு வந்த ஜலகண்டேஸ்வரர் கோவில் நந்தி சிலை மற்றும் கிறிஸ்தவ கோபுரங்கள் என புராதன சின்னங்களை அப்படியே விட்டு விட்டு அங்கிருந்து இடம் பெயர்ந்தனர்.

சிலை மற்றும் கோபுரம் மேட்டூர் அணையில் மூழ்கி காணப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 74 அடிக்கு கீழ் வரும் போது கிறிஸ்தவ கோபுரமும், 69 அடிக்கு கீழ் குறைந்தால் நந்தி சிலையும் வெளியே தெரிய தொடங்கும்.

இந்த நிலையில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் தற்போது 67 அடிக்கு கீழே சரிந்துள்ளதால், பண்ணவாடி நீர்த்தேக்க பகுதியில் மூழ்கியிருந்த ஜலகண்டேஸ்வரர் கோயிலின் நந்தி சிலை தற்போது வெளியே தெரியத் தொடங்கியுள்ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *