இளைஞர்கள் அனை​வரும் சேர்ந்து தேசத்​தை​யும் ஜனநாயகத்தையும் மோடி​யிடம் இருந்து மீட்​டெடுப்​போம்; சிஜேபி நிறு​வனர் அபிஜித் விமர்சனம்!!

பெங்​களூரு:
தலை​மைத் தேர்​தல் ஆணை​யர் ஞானேஷ் குமார் ராஜி​னாமா செய்​யக்​கோரி பெங்​களூரு​வில் உள்ள சுதந்திர பூங்கா​வில் நேற்று கண்டன ஆர்ப்​பாட்​டம் நடை​பெற்​றது.

கரப்பான்​பூச்சி ஜனதா கட்​சி​யின் (சிஜேபி) நிறு​வனர் அபிஜித் திப்கே தலை​மை​யில் நடை​பெற்ற ஆர்ப்​பாட்​டத்​தில் எழுத்​தாளர் தேவனூரு மகாதே​வா, நடிகர் பிர​காஷ் ராஜ், யூடியூபர் துருவ் ராதி உள்​ளிட்​டோர் பங்​கேற்​றனர்.

ஆர்ப்​பாட்​டத்​தில் அபிஜித் திப்கே பேசும்​போது, “தலைமை தேர்​தல் ஆணை​யர் எஸ்​ஐஆர் மூலம் நாடு முழு​வதும் வாக்​காளர் பட்டியலில் இருந்து 13 கோடி பெயர்​களை நீக்​கி​யுள்ளார்.

உயிரோடு இருப்​பவர்​களின் பெயர்​களை எல்​லாம் பட்​டியலில் இருந்து நீக்​கி​யுள்​ளார். அவரது மோசடி​யின் காரண​மாகவே பாஜக கடந்த மக்​கள​வைத் தேர்​தலில் வெற்றி பெற்​றது.

இந்த மோசடி​யால் பாஜகவை எதிர்த்த மு.க.ஸ்​டா​லின், மம்தா பானர்ஜி ஆகியோர் தோல்வி அடைந்​தனர். வாக்கு திருட்​டின் மூலமாகவே மோடி மீண்​டும் பிரதம​ராகி இருக்​கிறார்.

எஸ்​ஐஆர் மூலம் ஜனநாயகத்தை அவர் கொலை செய்து விட்​டார். இளைஞர்கள் அனை​வரும் சேர்ந்து தேசத்​தை​யும் ஜனநாயகத்தையும் மோடி​யிடம் இருந்து மீட்​டெடுப்​போம்” என்றார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *