விடுதலைச் சிறுத்தைகள் அங்கம் வகிக்கும் அணியே வெற்றி பெறும் – திருமா வளவன்!!

சென்னை:
‘விடுதலைச் சிறுத்தைகள் அங்கம் வகிக்கும் அணியே வெற்றி பெறும் என்பதை உறுதிப்படுத்தும் வகையில், முழுமையான ஈடுபாட்டுடன் களப்பணி ஆற்றிய கட்சியினருக்கும், பொது மக்களுக்கும் நன்றி’ என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘மதுராந்தகம், தாராபுரம் ஆகிய தொகுதிகளில் ‘மதசார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி’யின் சார்பில் போட்டியிட்ட தவெக வேட்பாளர்கள் மரகதம் குமரவேல் மற்றும் சத்யபாமா ஆகிய இருவரும் வெற்றி பெற்றிருப்பது இக்கூட்டணிக்கு மக்கள் அளித்த அங்கீகாரமாகும்.

கடந்த பொதுத் தேர்தலில் இவ்விருதொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பை இழந்த தவெக, தற்போது கணிசமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

இது எமது கூட்டணியை மட்டுமின்றி, ‘கூட்டணி அரசு’ என்கிற தவெக தலைவர் ஜோசப் விஜய்யின் மகத்தான நிலை பாட்டையும் மக்கள் அங்கீகரித்துள்ளனர் என்பதையே உணர்த்துகிறது.

‘விடுதலைச் சிறுத்தைகள் அங்கம் வகிக்கும் அணியே வெற்றி பெறும்’ என்பதை உறுதிப்படுத்தும் வகையில், முழுமையான ஈடுபாட்டுடன் களப்பணி ஆற்றிடவேண்டுமென நான் விடுத்த வேண்டுகோளை ஏற்று, தவெக உள்ளிட்ட கூட்டணி கட்சி களைச் சார்ந்த தோழர்களுடன் இணைந்து திறம்பட செய லாற்றிய என் உயிரின் உயிரான விடுதலைச் சிறுத்தை களுக்கும் வாக்காளப் பொதுமக்களுக்கும் எமது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

கூட்டணியின் நல்லாதரவோடு வெற்றி பெற்ற வேட் பாளர்களுக்கும் கூட்டணியின் தலைவர் திரு. ஜோசப் விஜய் அவர்களுக்கும் எமது வாழ்த்துகள்’ எனத் தெரிவித்துள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *