புரட்டாசி மாத 4-வது சனிக்கிழமையையொட்டி திருப்பதியில் குவிந்த பக்தர்கள் !!

புரட்டாசி மாத 4-வது சனிக்கிழமை மற்றும் மகாளய அமாவாசையை முன்னிட்டு, திருவொற்றியூர் காலடிப்பேட்டையில் உள்ள பிரசித்தி பெற்ற கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடுகளும், பிரம்மாண்ட அலங்காரங்களும் நடைபெற்றன.

சுவாமி தரிசனத்திற்காக அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, “கோவிந்தா… கோவிந்தா…” என்ற பக்தி கோஷ முழக்கங்களுடன் பெருமாளை வழிபட்டனர்.

மூலவர் கல்யாண வரதராஜ பெருமாளுக்கு சுமார் 400 கிலோ எடையுள்ள உலர் பழங்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்ட ஆடைகள் அணிவிக்கப்பட்டிருந்தன.

மேலும், உற்சவர் பவள வண்ண பெருமாள், ஸ்ரீதேவி பூதேவி தாயாருக்கு வெண்பட்டு உடுத்தப்பட்டு, பாதாம், முந்திரி, லவங்கம், செர்ரி, கிவி ஆகிய உலர் பழங்களால் தொடுக்கப்பட்ட வண்ணமயமான பிரம்மாண்ட மாலைகள் அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

ஸ்ரீதேவி, பூதேவி தாயாருக்கு பாதாம் மற்றும் செர்ரி பழங்களால் பிரத்யேகமாக அமைக்கப்பட்ட பழ ஜடை அலங்காரம் பக்தர்களைப் பெரிதும் கவர்ந்தது.

மேலும் கோவிலில் வீற்றிருக்கும் பெருந்தேவி தாயார், ஆண்டாள், ஆஞ்சநேயர், சக்கரத்தாழ்வார் மற்றும் ஆழ்வார்கள்- மணவாள மாமுனிகள், ராமானுஜர் உள்ளிட்டவர்களுக்கும் பாதாம், முந்திரி உள்ளிட்ட உலர் பழங்களால் ஆன சிறப்பு மாலைகள் அணிவிக்கப்பட்டு விசேஷ அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தன.

ஆலயத்தின் மண்டபம் முழுவதும் முத்துமணிகளால் அலங்கார தோரணங்கள் தொங்கவிடப்பட்டு, கோவில் முழுவதுமே தெய்வீக கலைநயத்துடன் ஜொலித்தது.

கோவிலின் உட்புற வாசலில், கம்பீரமான ராஜகோபுர தரிசனத்தை பிரதிபலிக்கும் வகையில், வண்ண வண்ண நிறப்பொடி தூள்களால் பிரம்மாண்ட கோலங்கள் வரையப்பட்டு வரவேற்பு அளிக்கப்பட்டது.

பிரம்மாண்ட உலர் பழ அலங்கார தரிசனத்தைக் கண்ட பக்தர்கள், நெகிழ்ச்சியுடனும் பக்தி பரவசத்துடனும் பெருமாளைத் தரிசித்தனர்.

புரட்டாசி சனிக்கிழமைகளில் விதவிதமான அலங்காரத்தில் காட்சியளிக்கும் பெருமாளை காண வெளிப்பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *