100 அடி தூரம் உள்வாங்கிய திருச்செந்தூர் கடல்!!

திருச்செந்தூர்;

திருச்செந்தூர் கடல் அமாவாசை, பவுர்ணமி போன்ற நாட்க ளில் உள்வாங்கி காணப்படுவதும், சில நேரங்களில் அதிக சீற்றத்துடன் வெளியே வருவதும் இயல்பான ஒன்றாகும்.

சில மணி நேரங்களுக்கு பிறகு மீண்டும் இயல்பு நிலை திரும்புவதும் வழக்கமாகும்.

இன்று அமாவாசை என்பதால் கோவில் கடலானது சுமார் 100 அடி தூரம் உள்வாங்கி காணப்படுகிறது. இதனால் பாசி படிந்த பாறைகள் வெளியே தெரிந்தது.

பக்தர்கள் பாறை மீது நின்று செல்பி எடுத்து மகிழ்ந்தனர். கடல் அலைகள் இன்றி குளம்போல் காட்சியளித்ததால் பக்தர்கள் அச்சமின்றி புனித நீராடி வருகின்றனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *