காதலை முற்​றிலும் வேறு ஒரு கோணத்​தில் நமக்கு காட்​டும் ‘ஹைக்கூ’

சென்னை:
ஏகன், ஸ்ரீதே​வி, ஃபெமினா உள்பட பலர் நடித்​துள்ள ஹைக்கூ திரைப்​படம் அக்​.23-ல் வெளி​யாகிறது. அருளானந்து தயாரித்​துள்ள இப்​படத்​துக்கு சித்​துக்​கு​மார் இசை அமைத்​துள்​ளார்.

இதன் இசை வெளி​யிட்டு விழா சென்​னை​யில் நடை​பெற்​றது. படக்​குழு​வினருடன் இயக்​குநர்​கள் சசி, பொன்​ராம், தயாரிப்​பாளர்​கள் கலைப்​புலி எஸ். தாணு, தனஞ்​செயன் உள்பட பலர் கலந்​து​கொண்​டனர்.

இயக்​குநர் சசி பேசும்​போது, ‘‘மிக​வும் எளிமை​யான கதை ‘ஹைக்​கூ’. இரண்டு விதமான காதலை நுணுக்​க​மாகச் சொன்ன இயக்​குநருக்​கும் சிறப்​பாக நடித்த நடிகர்​களுக்​கும் வாழ்த்​துகள்.

நிச்​ச​யம் இது படக்​குழு​வினருக்கு மைல்​கல் திரைப்​பட​மாக அமை​யும்” என்​றார்.

தயாரிப்​பாளர் தனஞ்​செயன் பேசும்​போது, “இந்​தப் படத்தை பார்த்து விட்​டேன்.

கவிதை​யான படம். படத்​தின் கதை புதிதானது. காதலை முற்​றிலும் வேறு ஒரு கோணத்​தில் நமக்கு காட்​டும். இது போன்ற கதையை கொடுத்த இயக்​குநர் யுவ​ராஜுக்கு வாழ்த்​துகள்” என்​றார்​.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *