பாம்​பனைச் சேர்ந்த மீன​வர் படகு ஒன்​றில் மஞ்​சள் சூரை மீன்​கள் 3 சிக்​கின; ரூ.75 ஆயிரத்துக்கு விற்பனை!!

ராமேசுவரம்

ராமேசுவரம் தமிழக மீன​வர்​கள், இந்​தி​யப் பெருங்​கடல், வங்​காள விரி​கு​டா, மன்​னார் வளை​குடா மற்​றும் பாக் நீரிணை கடற்​பகு​தி​யில் பெரும்​பாலும் இறால், நண்​டு, கணவாய் உள்​ளிட்ட வகை மீன்​களையே பிடிக்க பெரு​மள​வில் ஆர்​வம் காட்டி வரு​கின்​ற​னர்.

ஆனால் ஆழ்​கடல் மீன்​பிடி முறை​யில் சூரை மீன்​களை பிடிப்​ப​தற்கு பெரும்​பாலும் முன்​வ​ரு​வ​தில்​லை.

இந்​நிலை​யில் ஞாயிற்​றுக்​கிழமை ராமேசுவரம் அருகே பாக் நீரிணை கடற்​பகு​தி​யில் மீன் பிடித்து விட்டு கரை திரும்​பிய பாம்​பனைச் சேர்ந்த மீன​வர் படகு ஒன்​றில் மஞ்​சள் சூரை மீன்​கள் 3 சிக்​கின.

இந்த ராட்சத மஞ்​சள் சூரை மீன்​கள் தலா 100 கிலோ, 118 கிலோ மற்​றும் 112 கிலோ எடை அளவு​களில் மொத்​தம் 330 கிலோ இருந்​தன.

3 மஞ்​சள் வால் சூரை மீன்​களை மீன் வியா​பாரி ஒரு​வர் கிலோ ரூ.230 வீதம் மொத்​தம் இருந்த 330 கிலோ மீன்​களை என ரூ.75 ஆயிரத்து 900-க்கு ஏலம் எடுத்​தார்.

3 மீன்​கள் 75 ஆயிரம் ரூபாய்க்கு விற்​பனை​யான​தால் நாட்​டுப்​படகு மீன​வர்​கள் மகிழ்ச்சி அடைந்​தனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *