சென்​னை, காஞ்​சிபுரம், திரு​வள்​ளூர் மாவட்​டங்​களைச் சேர்ந்த அமைப்​பு​சாரா தொழிலா​ளர்​கள் 100 பேருக்​கு, ரூ.42 லட்​சம் மதிப்​புள்ள நலத்​திட்ட உதவி​களை அமைச்சர் முகமது பர்வேஸ் வழங்கினார்!!

சென்னை:
சென்​னை, காஞ்​சிபுரம், திரு​வள்​ளூர் மாவட்​டங்​களைச் சேர்ந்த அமைப்​பு​சாரா தொழிலா​ளர்​கள் 100 பேருக்​கு, ரூ.42 லட்​சம் மதிப்​புள்ள நலத்​திட்ட உதவி​களை தொழிலா​ளர் நல அமைச்​சர் முகமது பர்​வேஸ் வழங்​கி​னார்.

அமைப்​பு​சாரா தொழிலா​ளர்​களுக்​கான நலத்​திட்ட உதவி​கள் வழங்​கும் விழா சென்னை அண்ணா நகரில் உள்ள தொழிலா​ளர் ஆணை​யர் அலு​வல​கத்​தில் நேற்று நடை​பெற்​றது.

இவ்​விழா​வில் சென்​னை, செங்​கல்​பட்டு மற்​றும் திரு​வள்​ளூர் மாவட்​டங்​களைச் சேர்ந்த 100 பயனாளி​களுக்கு ரூ.42,21,900 மதிப்​பிலான உதவித்​தொகையை தொழிலா​ளர் நலன் மற்​றும் திறன் மேம்​பாட்டு துறை அமைச்​சர் முகமது பர்​வேஸ் வழங்​கி​னார். தொடர்ந்து அவர் பேசி​ய​தாவது:

அமைப்​பு​சாரா தொழிலா​ளர்​களுக்கு சமூகப் பாது​காப்பு உதவி​களை வழங்​கு​வ​தில் தமிழகம் முன்​னோடி மாநில​மாக திகழ்​கிறது.

அமைப்​பு​சாரா தொழிலா​ளர்​கள் நலவாரி​யங்​களால் வழங்​கப்​படும் விரி​வான நலத்​திட்​டங்​களில், திருமண உதவி, மகப்​பேறு உதவி, குழந்​தைகளின் கல்வி உதவி, விளை​யாட்​டுப் போட்​டிகளில் பங்​கேற்​ப​தற்​கான உதவி, மாதாந்​திர ஓய்​வூ​தி​யம், இயற்கை மரண உதவி, பணி​யிட விபத்து மரண உதவி மற்​றும் விபத்து ஊனம் உள்​ளிட்ட பல்​வேறு நலத்​திட்ட உதவி​கள் வழங்​கப்​பட்டு வரு​கின்​றன.

அமைப்​பு​சாரா தொழிலா​ளர் நல வாரி​யங்​களில் அனைத்து சேவை​களும் கணினிமய​மாக்​கப்​பட்​டுள்​ளன.

மாவட்​டந்​தோறும் தொழிலா​ளர் உதவி ஆணை​யர் (சமூக பாது​காப்பு திட்​டம்) அலு​வல​கங்​கள் மூலம் பதிவு, புதுப்​பித்​தல் மற்​றும் நலத்​திட்ட உதவி​கள் வழங்​கப்​பட்டு வரு​கின்​றன.

அமைப்​பு​சாரா தொழிலா​ளர்​கள் நலவாரி​யங்​களில் கடந்த மே 10 முதல் செப்​டம்​பர் 30 வரை 3 லட்​சத்து 53 ஆயிரத்து 840 தொழிலா​ளர்​கள் புதி​தாக பதிவு செய்​துள்​ளனர்.

6 லட்​சத்து 88 ஆயிரத்து 674 தொழிலா​ளர்​களுக்கு பல்​வேறு நலத்​திட்​டங்​களின் கீழ் ரூ.688 கோடியே 8 லட்​சத்து 51 ஆயிரம் உதவித் தொகை வழங்​கப்​பட்​டுள்​ளது.

5 லட்​சத்து 88 ஆயிரத்து 296 ஓய்​வூ​தி​ய​தா​ரர்​கள் மாதம்​தோறும் ரூ.1,200 ஓய்​வூ​தி​யம் பெற்று வரு​கின்​றனர். இவ்​வாறு அவர் பேசி​னார்.

இவ்​விழா​வில், தொழிலா​ளர் நலன் மற்​றும் திறன் மேம்​பாட்டு துறை செயலர் கொ. வீர ராகவ ராவ், தொழிலா​ளர் ஆணை​யர் மா. வள்​ளலார் மற்​றும் கூடு​தல் தொழிலா​ளர் ஆணை​யர்​கள், இணை ஆணை​யர்​கள் மற்​றும்​ தொழிலா​ளர்​ துறை அலு​வலர்​கள் கலந்து கொண்டனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *