சென்​னை​யில் பணி நிரந்​தரம் உள்​ளிட்ட கோரிக்​கைகளுக்​காக போராட்​டத்​தில் ஈடு​பட்ட பல்​நோக்கு மருத்​து​வ​மனை பணி​யாளர்​கள் கைது!!

சென்னை:
சென்​னை​யில் பணி நிரந்​தரம் உள்​ளிட்ட கோரிக்​கைகளுக்​காக போராட்​டத்​தில் ஈடு​பட்ட பல்​நோக்கு மருத்​து​வ​மனை பணி​யாளர்​கள் கைது செய்​யப்​பட்​டனர்.

தமிழகம் முழு​வதும் அரசு மருத்​து​வ​மனை​கள் மற்​றும் ஆரம்ப சுகா​தார நிலை​யங்​களில் பல்​வேறு பிரிவு​களில் பணி​யாற்​றும் 3,400-க்​கும் மேற்​பட்ட பல்​நோக்கு மருத்​து​வ​மனை பணி​யாளர்​கள் பணி நிரந்​தரம் உள்​ளிட்ட கோரிக்​கைகளை நிறைவேற்​றக்​கோரி தொடர்ந்து பல்​வேறு போராட்​டங்​களில் ஈடு​பட்டு வரு​கின்​றனர்.

இந்​நிலை​யில், பணிநிரந்​தரம் உள்​ளிட்ட கோரிக்​கைகளை வலி​யுறுத்தி நேற்று சென்னை எழும்​பூர் ராஜரத்​தினம் மைதானம் அருகே உண்​ணா​விரத போராட்​டத்​தில் ஈடுபட முயன்​றனர்.

பல்​நோக்கு மருத்​து​வ​மனை பணி​யாளர் மேம்​பாட்டு சங்​கத்​தின் சார்​பில், உரிமை இயக்​கத்​தின் மாநில தலை​வர் கு.​பாரதி தலை​மை​யில் நடந்த போராட்​டத்​தில் மாநில முழு​வதும் இருந்து 500-க்​கும் மேற்​பட்ட பணி​யாளர்​கள் பங்​கேற்​றனர்.

போராட்​டத்​துக்கு அனு​மதி இல்​லாத​தால், போராட்​டத்​தில் பங்​கேற்க வந்​தவர்​களை போலீ​சார் கைது செய்ய தொடங்​கினர். இதனால் இரு தரப்​பினருக்​கும் இடையே வாக்​கு​வாதம், தள்​ளு​முள்ளு ஏற்​பட்​டது.

இதையடுத்​து, பணி​யாளர்​கள் சாலை​யில் அமர்ந்து போராட்​டத்​தில் ஈடு​பட்​டனர்.

அனைத்து பணி​யாளர்​களை​யும் போலீ​சார் குண்​டு​கட்​டாக தூக்கி கைது செய்து வாக​னங்​களில் ஏற்றி சென்று சமூக நலக்​கூடங்​களில் அடைத்​தனர்.

இதனால், அந்த பகு​தி​யில் பெரும் பரபரப்பு ஏற்​பட்​டது. முன்​ன​தாக, சில பெண் பணி​யாளர்​கள் மயக்​கமடைந்​த​தால், அவர்​கள் கீழ்ப்​பாக்​கம் அரசு மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்​டனர்.

இதுதொடர்​பாக பல்​நோக்கு மருத்​து​வ​மனை பணி​யாளர் மேம்​பாட்டு சங்​கத்​தின் மாநில தலை​வர் கே.தமிழ்ச்​செல்​வன் கூறுகை​யில், “உண்​ணா​விரத போராட்​டம் நடத்​திய எங்​களை போலீ​சார் கைது செய்​துள்​ளனர்.

எங்​களுக்கு போராட்​டம் நடத்த உரிமை இல்​லை​யா? கழிப்​பறைக்கு சென்ற பெண் பணி​யாளர்​கள் கைது செய்​யப்​பட்​டுள்​ளனர்.

போராட்​டத்​தில் பங்​கேற்க பல்​வேறு மாவட்​டங்​களில் இருந்து வந்து கொண்​டிருந்​தவர்​களை வழி​யிலேயே தடுத்து நிறுத்தி கைது செய்​துள்​ளனர்.

பல இடங்​களில் பணி​யாளர்​கள் வீட்டு காவலில் வைக்​கப்​பட்​டுள்​ளனர்.

சுகா​தா​ரத்​துறை அமைச்​சர், செயலர் எங்​களிடம் பேச்​சு​வார்த்தை நடத்தி அடுத்த மாதம் 10-ம் தேதி வரை அவகாசம் கேட்​டுள்​ளார்.

அப்​போது கோரிக்​கைகள் தொடர்​பாக பேச்​சு​வார்த்தை நடத்​து​வ​தாக தெரி​வித்​துள்​ளனர்” என்​றார்.

எதிர்க்​கட்​சித் தலை​வர் உதயநி​தி, தேமு​திக பொதுச்​செய​லா​ளர் பிரேமல​தா, அமமுக பொதுச்​செய​லா​ளர் டிடிவி தினகரன் உள்​ளிட்​டோர், பல்​நோக்கு மருத்​து​வ​மனை பணி​யாளர்​கள் கைது செய்​யப்​பட்​டதற்கு கண்​டனம் தெரி​வித்​துள்​ளனர்.

மேலும், அவர்​களின் கோரிக்​கைகளை நிறைவேற்ற வேண்​டும்​ என்​று வலி​யுறுத்​தி​யுள்​ளனர்​.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *