வேலுமணி தலைமையில் அதிருப்தி எம்எல்ஏக்கள் ஆலோசனை!!

சென்னை:
அதி​முக, பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி தலை​மை​யில் தொடர் தோல்வி​களை சந்​தித்து வரு​வ​தாக குற்​றஞ்​சாட்டி வரும் எஸ்​.பி.வேலுமணி, சி.​வி.சண்​முகம் தரப்​பினர் பழனி​சாமியை பொதுச்​செய​லா​ளர் பதவி​யில் இருந்து நீக்​கி​விட்​டு, தவெக அரசுக்கு ஆதர​வளிக்க ரகசியத் திட்​டம் தீட்டி வரு​வ​தாக தகவல் வெளி​யாகி​யுள்​ளது.

தமிழகத்​தில் 2026 தேர்​தலுக்​குப் பிறகு, தவெக அரசுக்கு ஆதர​வளிப்​ப​தா, வேண்​டாமா என்ற நிலைப்​பாட்​டில் இரு​வேறு கருத்​துகள் உரு​வானது.

பழனி​சாமி ஆதர​வளிக்​க​வில்​லை. எஸ்​.பி.வேலுமணி, சி.​வி.சண்​முகம் தலை​மையி​லான அணி தவெக அரசுக்கு ஆதவளித்​​தது.

அன்று முதலே அதி​முக இரு அணி​களாக செயல்​பட்டு வரு​கிறது. அப்​போ​து எழுந்த உள்​கட்சி பூசல் தற்போது வரை நீடித்து வருகிறது.

பொதுத் தேர்தல் தோல்வி குறித்து விவாதிக்க பொதுக்​குழுவை கூட்​டு​மாறு அதிருப்தி அணி​யினர் வலி​யுறுத்​தினர்.

இதற்​கிடையே, அதி​முகவைச் சேர்ந்த 6 எம்​எல்​ஏக்​கள் தங்​களது பதவி​களை ராஜி​னாமா செய்​து​விட்​டு, தவெக​வில் இணைந்​தனர்.

இவர்​களில் 2 பேர் இடைத்​தேர்​தலில் தவெக சார்​பில் போட்​டி​யிட்டு வெற்​றி​யும் பெற்​றனர்.

கடந்த தேர்​தலில் வென்ற அதி​முக இந்த இரு தொகு​தி​களி​லும், இம்​முறை 3-ம் இடத்தை பிடித்​தது. இதன்​தொடர்ச்​சி​யாக அதி​முக​வில் உட்​கட்சி பூசல் தீவிரமடைந்​துள்​ளது.

இதற்கு மேல் பழனி​சாமி அதி​முக தலைமை பொறுப்பை வகிக்​கக் கூடாது என்​ப​தில் வேலுமணி தரப்பு உறு​தி​யாக உள்​ள​தாகத் தெரி​கிறது.

இந்​நிலை​யில், கடந்த இரு நாட்​களாக வேலுமணி, சண்​முகம் உள்​ளிட்ட அதிருப்தி எம்​எல்​ஏக்​கள் அடுத்​தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோ​சித்​தனர்.

இதில் நாமும் ராஜி​னாமா செய்​து​விட்​டு, தவெக​வில் இணைந்து இடைத்​தேர்​தலை எதிர்​கொள்​ளலாமா என ஆலோ​சிக்​கப்​பட்​டது.

அதன்​பிறகு, பொதுக்​குழுவை கூட்டி பொதுச்​செய​லா​ளர் பதவியி​லிருந்து பழனி​சாமியை நீக்​கி​விட்​டு, கட்​சி​யைக் கைப்​பற்றி தவெக அரசுக்கு அதி​முக சார்​பில் ஆதர​வளிப்​பது தொடர்​பாக ரகசியத் திட்​டம் தீட்டி வரு​வ​தாக​வும் பல்​வேறு மாவட்ட செய​லா​ளர்​களை தொலைபேசி வழி​யாக தொடர்​பு​கொண்டு பேசி வரு​வ​தாக​வும் தகவல் வெளி​யாகி​யுள்​ளது.

இதுதொடர்​பாக அதி​முக மூத்த நிர்​வாகி ஒரு​வரிடம் கேட்​ட​ போது, “அதி​முக​வுக்கு எதி​ராக செயல்​படும் அவர்​கள் செல்​வச்​செழிப்​பில் உள்​ளனர். அதை அதி​முக என்ற கட்சிதான் அவர்​களுக்கு அளித்​தது.

அதை அவர்​கள் நினைத்து பார்க்க வேண்​டும். அவர்​களின் முயற்சி தோற்​கும்.

ஒரு மாவட்ட செய​லா​ளர் ​கூட அவர்​கள் பக்​கம் செல்​ல​மாட்​டார்​கள். அனை​வரும் பழனி​சாமி பக்​கமே உறு​தி​யாக இருப்​பார்​கள்” என்​றார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *