இந்த வாரத்திற்குரிய விழாக்கள், விசேஷங்களை விரிவாக பார்க்கலாம்.
13-ந் தேதி (செவ்வாய்)
* மதுரை மீனாட்சி அம்மன் கொலு மண்டபத்தில் பட்டாபிஷேக காட்சி.
* குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் ரிஷப வாகனத்தில் பவனி.
* சுவாமிமலை முருகன் ஆயிரம் நாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.
* கீழ்நோக்கு நாள்.
14-ந் தேதி (புதன்)
* சதுர்த்தி விரதம்.
* சிருங்கேரி சாரதாம்பாள் வைஷ்ணவி கருட வாகனத்தில் புறப்பாடு.
* பாபநாசம் சிவபெருமான் திருவீதி உலா.
* காஞ்சிபுரம் காமாட்சி அம்மன், ராமநாதபுரம் ராஜராஜேஸ்வரி தலங்களில் சிறப்பு அலங்காரம்.
* சமநோக்கு நாள்.
15-ந் தேதி (வியாழன்)
* குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் காமதேனு வாகனத்தில் பவனி.
* சிருங்கேரி சாரதாம்பாள் மோகினி அலங்காரம்.
* திருவெம்பல், பாபநாசம், திருக்குற்றாலம் தலங்களில் சிவபெருமான் திருவீதி உலா.
* சமநோக்கு நாள்.
16-ந் தேதி (வெள்ளி)
* சஷ்டி விரதம்.
* மதுரை மீனாட்சி அம்மன் அர்த்தநாரீசுவரர் திருக்கோலக் காட்சி.
* குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் மகிஷாசுரமர்த்தினி திருக்கோலம்.
* மதுரை வீரராகவர், அருப்புக்கோட்டை சவுடாம்பிகை அம்மன், காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் சிறப்பு அலங்காரம்.
* கீழ்நோக்கு நாள்.
17-ந் தேதி (சனி)
* சிருங்கேரி சாரதாம்பாள் ராஜராஜேஸ்வரி அலங்காரம்.
* பாபநாசம் சிவபெருமான் திருவீதி உலா.
* திருவில்லிபுத்தூர் சமீபம் திருவண்ணாமலை சீனிவாசர் கருட வாகனத்தில் பவனி.
* கீழ்நோக்கு நாள்.
18-ந் தேதி (ஞாயிறு)
* துர்க்காஷ்டமி.
* நெல்லை கெட்வெல் ஆஞ்சநேயர் முத்தங்கி சேவை.
* மதுரை மீனாட்சி அம்மன் மகிஷாசுரமர்த்தினி திருக்கோலக் காட்சி.
* ராமநாதபுரம் ராஜ ராஜேஸ்வரி, மதுரை வீரராகவர் தலங்களில் சிறப்பு அலங்காரம்.
* கீழ்நோக்கு நாள்.
19-ந் தேதி (திங்கள்)
* சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை.
* திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணப் பெருமாள் ஊஞ்சல் உற்சவம்.
* குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் அன்ன வாகனத்தில் கலைமகள் கோலம்.
* மேல்நோக்கு நாள்.