சென்னை:
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாக உள்ள ‘ஜெயிலர் 2’ படத்தை சட்டவிரோதமாக வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம் நாளை மறுநாள் (அக்.15) உலகம் முழுவதும் வெளியாகயுள்ளது.
இந்நிலையில், ‘ஜெயிலர் 2’ படத்தை சட்டவிரோதமாக இணையதளங்கள், டிஜிட்டல் தளங்களில் வெளியிட தடைக் கோரி தயாரிப்பு நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவில், படம் வெளியான முப்பது நிமிடங்களில் சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிடப்படுவதால் கடும் நஷ்டத்தை சந்திப்பதாக குறிப்பிட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.பி.பாலாஜி, தயாரிப்பு நிறுவனத்தின் கோரிக்கையை பதிவு செய்து கொண்டதுடன் ‘ஜெயிலர் 2’ படத்தை சட்டவிரோதமாக வெளியிடவும் தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.