தியேட்டரை ஆக்கிரமித்த பிரபலங்கள்… !!

சென்னை;
இந்நிலையில், இன்று அதிகாலை நடைபெற்ற இப்படத்தின் முதல் நாள் முதல் காட்சிக்கு (FDFS) சூப்பர் ஸ்டாரின் குடும்பத்தினர் மற்றும் திரையுலகைச் சேர்ந்த முன்னணி பிரபலங்கள் பலரும் நேரில் வந்து ரசிகர்களுடன் இணைந்து படத்தை ரசித்துள்ளனர்.

இன்று அதிகாலை சென்னையில் உள்ள பிரபல ரோகிணி தியேட்டர் உள்ளிட்ட முக்கிய திரையரங்குகளில் ‘ஜெயிலர் 2’ படத்தின் FDFS காட்சிகள் திரையிடப்பட்டன.

இதில் ரசிகர்களுக்கு இணையாகத் திரை பிரபலங்களும் திரண்டு வந்து தியேட்டரை திருவிழா கோலமாக மாற்றினர்.

சூப்பர் ஸ்டாரின் மனைவி லதா ரஜினிகாந்த், மூத்தமகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மற்றும் இளைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் ஆகியோர் திரையரங்கிற்கு நேரில் வந்து, தியேட்டர் வளாகத்தில் ரசிகர்களுடன் இணைந்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

நடிகர் தனுஷ் தனது மகன்கள் யாத்ரா மற்றும் லிங்காவுடன் சென்னை ரோகிணி தியேட்டருக்கு வந்து ரசிகர்களோடு அமர்ந்து FDFS காட்சியை ரசித்துப் பார்த்தார்.

தியேட்டருக்குள் தனுஷ் மற்றும் அவரது மகன்கள் இருக்கும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

இப்படத்திற்கு வெறித்தனமான பின்னணி இசையை வழங்கி யுள்ள இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் மற்றும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகை ரம்யா கிருஷ்ணன் மற்றும் நடிகர் சூரி ஆகியோரும் FDFS காட்சியை நேரில் கண்டு ரசித்தனர்.

தற்போது ரஜினிகாந்தை வைத்து ‘தர்மன்’ திரைப்படத்தை இயக்கி வரும் இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து மற்றும் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் ஆகியோரும் FDFS காட்சிக்கு வந்து தியேட்டர் கொண்டாட்டத்தில் பங்கேற்றார்.

மேலும், காவ்யா மாறன் உள்ளிட்ட பல முக்கிய விஐபிக்களும் இந்த மாஸ் ஓப்பனிங்கைக் கொண்டாடத் தவறவில்லை.
ரசிகர்களின் வெறித்தனமான கொண்டாட்டம்

தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திரா போன்ற அண்டை மாநிலங்களிலும், வெளிநாட்டுச் சந்தைகளிலும் இன்று அதிகாலை 5 மணி மற்றும் 6 மணி காட்சிகளுடன் ஜெயிலர் 2 திருவிழா தொடங்கியது.

தியேட்டர்களுக்கு வெளியே மேள தாளங்கள், பட்டாசுகள் மற்றும் டிஜே இசையுடன் ரசிகர்கள் தங்களது ‘தலைவர்’ வருகையைக் கொண்டாடித் தீர்த்தனர்.

படம் பார்த்த ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் தங்களது ஆரம்பக்கட்ட விமர்சனங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

அனிருத்தின் பின்னணி இசை மற்றும் பாடல்கள் திரையரங்குகளில் விசில் சத்த பறக்கவிடுவதாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

முதல் பாதியில் நெல்சனுக்கே உரிய டார்க் காமெடி மற்றும் அதிரடி காட்சிகள் மிகச்சிறப்பாக வேலை செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

ரஜினிகாந்தின் ஸ்வாக், ஸ்டைல் மற்றும் படத்தில் வரும் மாஸான கேமியோ கதாபாத்திரங்கள் தியேட்டரை அதிர வைத்துள்ளதாகப் பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வருகின்றன.

அட்வான்ஸ் புக்கிங்கிலேயே கோடிக் கணக்கில் வசூல் சாதனை படைத்த ‘ஜெயிலர் 2’, இந்த வார இறுதியில் பாக்ஸ் ஆபீஸில் புதிய சாதனைகளை முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *