எத்தனை போராட்டக் காரர்களை இந்த அரசால் கைது செய்ய முடியும்? பாஜகவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி!!

சென்னை:
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் போராட்டம் நடத்திய இளைஞர்கள் கைது செய்யப்பட்ட விவகாரத்தில், ‘எத்தனை போராட்ட க்காரர்களை இந்த அரசால் கைது செய்ய முடியும்? எத்தனை இளைஞர்களின் குரலை பாஜகவால் ஒடுக்க முடியும்?’ என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

சட்ட உதவிகள் வழங்க தயார் இதுகுறித்து அவர் வெளியிட் டுள்ள எக்ஸ் தளப் பதிவில், ‘‘எத்தனை போராட்டக்காரர் களை இந்த அரசால் கைது செய்ய முடியும்?

எத்தனை இளைஞர்களின் குரலை பாஜகவால் ஒடுக்க முடியும்? சிறையில் அடைக்கப்படும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க, எந்த அரசியல் கட்சியையும் சாராத சாதாரண பொது மக்களும் பெருமளவில் வீதிக்கு வந்து, மக்கள் சக்தி என்னவென்பதை அவர்களுக்குக் காட்டுவார்கள்.

அஷுதோஷ் ரங்கா, சவுரவ் தாஸ் ஆகியோருக்கு எனது ஆதரவும் தோழமையும்.

அவர்களுக்குத் தேவையான அனைத்து சட்ட உதவிகளை வழங்கவும், வழக்கறிஞர்களை ஏற்பாடு செய்யவும் திமுக தயாராக உள்ளது’’ என கூறியுள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *