தனுஷ் ரசிகர் மன்றங்கள் நற்பணி இயக்கமாக மாற்றப் பட்டுள்ளதாகத் தகவல்!!

சென்னை:
தனுஷ் ரசிகர் மன்றங்கள் நற்பணி இயக்கமாக மாற்றப் பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் தனுஷ், ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ள ‘ஓம்’ படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இதில் மம்மூட்டி, சாய் பல்லவி, ஸ்ரீலீலா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தப் படம் நவ.20-ல் வெளியாகிறது. இப்போது தமிழரசன் பச்சைமுத்து இயக்கும் படத்தில் நடித்து வருகிறார்.

உறுப்பினர் சேர்க்கை தீவிரம் சினிமாவில் தொடர்ந்து நடித்து வந்தாலும் அவர் அரசியலுக்கு வர இருப்பதாக சமீப காலமாக செய்திகள் வருகின்றன. தனது ரசிகர் மன்றங்களை மாவட்ட வாரியாகப் பிரித்து நிர்வாகிகளை நியமித்தார்.

தொகுதி வாரியாக உறுப்பினர் சேர்க்கையையும் தீவிரப்படுத்தினார்.

இதற்கிடையே, ‘தமிழக எழுச்சிக் கழகம்’என்ற பெயரில் அரசியல் கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ததாக சில நாட்களுக்கு முன்பு செய்தி பரவியது.

இதனால் அவருடைய அரசியல் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கருதப்பட்ட நிலையில் தனது ரசிகர் மன்றங்களை நற்பணி இயக்கமாக மாற்றியுள்ளார்.

கோவையில் நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *