திருச்செந்தூரில் சிவன் கோயிலுக்குள் வெள்ளம் புகுந்தது!!

தூத்துக்குடி:
திருச்செந்தூர், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று அதிகாலை 4 மணி முதல் 7 மணி வரை 3 மணி நேரம் கனமழை பெய்தது.

இதனால், தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியது. திருச்செந்தூர் டி.பி.சாலையில் உள்ள 2 அரசு பள்ளிகளின் வளாகம் மற்றும் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு மழை நீர் தேங்கி குளம் போல் காட்சியளிக்கிறது.

திருச்செந்தூர் சிவன் கோயில் முதல் பிரகாரத்தில் மழைநீர் புகுந்து தேங்கி நின்றது.

சுப்பிரமணிய சுவாமி கோயில் செல்லும் சாலையில் மழை நீருடன் பாதாள சாக்கடை கழிவுநீர் கலந்து ஓடியதால் துர்நாற்றம் வீசியது. இதனால் பக்தர்கள் சிரமம் அடைந்தனர்.

மேலும், திருச்செந்தூரை சுற்றியுள்ள கிராமப்புறங்களில் 3 மணி நேரத்துக்கு மேலாக மின்தடை ஏற்பட்டது.

இளையான்குடி அருகே மின்னல் பாய்ந்து விவசாயப் பணி செய்து கொண்டிருந்த 2 பெண்கள் உயிரிழந்தனர்.

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே திருவள்ளூரில் விவசாய நிலத்தில் அப்பகுதியைச் சேர்ந்த ஆரோக்கியசாமி மனைவி சவுரியம்மாள் (46), அழகன் மனைவி பெரியகருப்பி (65) ஆகியோர் வேலை செய்து கொண்டிருந்தனர்.

நேற்று பிற்பகல் அப்பகுதியில் பலத்த மழை பெய்தது. அப்போது மின்னல் பாய்ந்ததில் சவுரியம்மாள், பெரியகருப்பி ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுகுறித்து இளையான்குடி போலீஸார் விசாரிக்கின்றனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *