முதல்வர் விஜய் உள்ளூரில் உள்ள மளிகைக் கடைக்கும் ஒரு எட்டு போய், விலைவாசி உயர்வைக் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும் – திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் !!

சென்னை:
“தமிழக முதல்வர் விஜய் லண்டன் போகிறார், கர்நாடகா போகிறார், ஆந்திரா போகிறார். போகட்டும்.

அப்படியே உள்ளூரில் உள்ள மளிகைக் கடைக்கும் ஒரு எட்டு போய், விலைவாசி உயர்வைக் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும்.” என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் தனது சமூகவலைதளப் பக்கத்தில், “முதல்வர் லண்டன் போகிறார், கர்நாடகா போகிறார், ஆந்திரா போகிறார்.

போகட்டும். அப்படியே உள்ளூரில் உள்ள மளிகைக் கடைக்கும் ஒரு எட்டு போய், விலைவாசி உயர்வைக் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும்.

தயவுசெய்து, உணவுத்துறை அமைச்சரிடம் கேட்டுவிட வேண்டாம். அவர் எல்லாம் ‘நார்மலாக’ இருக்கிறது என்பார்.

மக்கள் பண்டிகைக் காலத்தின் மகிழ்ச்சிக்குப் பதிலாக, பயத்தில் உறைந்துபோய் இருக்கிறார்கள். அவர்களிடம் கேளுங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

விண்ணை முட்டும் விலைவாசி உயர்வு:

கடந்த ஜூலை மாதம் முதல் இப்போது வரையிலான 3 மாதங்களில் அரிசி விலை கிலோவுக்கு ரூ.27 வரையிலும், 26 கிலோ மூட்டை ரூ.700 வரையிலும் உயர்ந்திருக்கிறது.

தமிழகத்தில் கடந்த ஜூலை மாதம் ரூ.1,100 ஆக இருந்த 26 கிலோ எடை கொண்ட சாதாரண ரக புழுங்கல் அரிசி மூட்டை விலை இப்போது ரூ.1,800 ஆக உயர்ந்திருக்கிறது.

அதாவது இந்த வகை அரிசியின் விலை கிலோ ரூ.42-லிருந்து ரூ.70 ஆக அதிகரித்திருக்கிறது.

பொன்னி புழுங்கல் அரிசி மூட்டை விலை ரூ.1,400-லிருந்து ரூ.1,900 ஆகவும், ஆந்திரா மற்றும் கர்நாடகத்திலிருந்து வரும் சோனா மசூரி அரிசி மூட்டை விலை ரூ.1,400-லிருந்து ரூ.2,000 ஆகவும் அதிகரித்திருக்கிறது.

சில்லறை விலையில் ஒரு கிலோ அரிசி ரூ.27 வரையிலும், துவரம் பருப்பு கிலோவுக்கு ரூ.6, உளுத்தம் பருப்பு ரூ.11 வீதமும் உயர்ந்துள்ள நிலையில், அதனால் ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், “அரிசி உள்ளிட்ட 11 அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை கண்காணித்து வருகிறோம்; அரிசி விலை உயரவே இல்லை; இது எதிர்க்கட்சிகளால் கட்டமைக்கப்படும் பொய்யான பிம்பம் தான் என்று உணவுத்துறை அமைச்சர் தெரிவித்திருந்தார்.

இந்தச் சூழலில், எகிறும் விலைவாசியால் மக்கள் பண்டிகைக் காலத்தின் மகிழ்ச்சிக்குப் பதிலாக, பயத்தில் உறைந்துபோய் இருக்கிறார்கள் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *