மேஷம்
சிந்தித்து செயல்பட வேண்டிய நாள். வரவைவிடச் செலவு கூடும். சகோதர வழியில் பிரச்சனைகள் உருவாகும். உத்தியோகத்தில் சக பணியாளர்களால் தொல்லை உண்டு.
ரிஷபம்
குடும்பச்சுமை கூடும் நாள். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற இயலாது. உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பகையை வளர்த்துக்கொள்ள வேண்டாம்.
மிதுனம்
விருப்பங்கள் நிறைவேறும் நாள். உதாசீனம் செய்தவர்கள் உங்களைத் தேடி வருவர். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகளை மேலதிகாரிகள் வழங்குவர்.
கடகம்
சான்றோர்களின் சந்திப்பு கிடைத்து மகிழும் நாள். குடும்பத்திற்குத் தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பயணம் பலன் தரும்.
சிம்மம்
வளர்ச்சி அதிகரிக்கும் நாள். தொழில் முன்னேற்றம் காண்பீர்கள். தனவரவு தாராளமாக வந்து சேரும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும்.
கன்னி
தெய்வீக சிந்தனை மேலோங்கும் நாள். கடின முயற்சிக்குப் பின்னால் காரியங்களில் வெற்றி கிடைக்கும். கொடுக்கல், வாங்கல்கள் ஒழுங்காகும்.
துலாம்
புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும் நாள். புனிதப் பயணங்களில் ஆர்வம் காட்டுவீர்கள். இல்லத்தில் மங்கல ஓசை கேட்பதற்கான அறிகுறிகள் தோன்றும்.
விருச்சிகம்
வளர்ச்சி கூடும் நாள். வருமானம் இருமடங்காகும். முயற்சி வெற்றி தரும். பொருளாதார முன்னேற்றம் கருதி நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள்.
தனுசு
துணிவும், தன்னம்பிக்கையும் கூடும் நாள். சுபகாரியப் பேச்சுகள் முடிவாகும். தொழில் வளர்ச்சிக்கு முக்கியப் புள்ளிகளைச் சந்தித்து முடிவெடுப்பீர்கள்.
மகரம்
நல்ல காரியம் நடைபெறும் நாள். தொலைபேசி வழித்தகவல் மகிழ்ச்சி தரும். தொழில் வளர்ச்சிக்கு நண்பர்கள் உறுதுணையாக இருப்பர்.
கும்பம்
முன்னேற்றம் ஏற்படும் நாள். கொடுத்த தொகை திரும்பக் கிடைக்கும். உறவினர்கள் மதிக்கும்படி நடந்து கொள்வீர்கள். அக்கம், பக்கத்தினரின் ஆதரவு உண்டு.
மீனம்
வாரிசுகளின் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் நாள். வாகனத்தைப் புதுப்பிக்கும் எண்ணம் ஏற்படும். அலைபேசி மூலம் சுபச்செய்திகள் வந்து சேரும்.