நவராத்திரி பிரம்மோற்சவ விழா: தனியார் வாகனங்கள் மலைக்குச் செல்ல தடை!!

திருப்பதி ;
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா கடந்த 12-ந்தேதி முதல் கோலாலமாக நடைபெற்று வருகிறது.

நவராத்திரி பிரம்மோற்சவ விழாவில் முக்கிய நிகழ்வான தங்க கருட சேவை இன்று மாலை 6.30 மணிக்கு தொடங்கி இரவு முழுவதும் நடைபெற உள்ளது.

ஸ்ரீதேவி,பூதேவி சமேதராய் ஏழுமலையான் 4 மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்க உள்ளார்.

கருட சேவையை காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருப்பதி மலையில் குவிந்து வருகின்றனர்.

போக்குவரத்து நெரிசலில் கட்டுப்படுத்தவும் பக்தர்களுக்கு சிரமம் ஏற்படாத வகையில் நேற்று இரவு 9 மணி முதல் நாளை காலை 6 மணி வரை தனியார் வாகனங்கள் திருப்பதி மலைக்குச் செல்ல அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.

பைக்குகள் நிறுத்த பாலாஜி இணைப்பு பஸ் நிலையம், நேரு நகராட்சி வளாகம், எஸ்.வி மருத்துவக் கல்லூரி மற்றும் இஸ்கான் மைதானங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


இதேபோல் தனியார் பஸ்கள் ஜி பார்க் சாலையில் உள்ள தேவ லோக், டிரைடெடன்ட், மாம்பழ சந்தை ஆகிய இடங்களில் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாகன நிறுத்தும் இடங்களில் இருந்து மலைக்குச் செல்ல அரசு போக்குவரத்து பஸ்கள் இயக்கப்படுகின்றன.

திருப்பதியில் நேற்று 72,337 பேர் தரிசனம் செய்தனர். 33,548 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.87 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

4 லட்சம் லட்டுக்கள் விற்பனையானது. நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 18 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *