அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் ராஜினாமா குறித்து புகார் அளித்த நாள் முதல் நடவடிக்கை எடுத்து வருகிறோம்; சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி பிரபாகர் தகவல்!!

சென்னை:
தமிழக சட்டப்பேரவையின் 2026-27-ம் ஆண்டுக்கான நூலகக் குழுவின் முதல் கூட்டம், சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி பிரபாகர் தலைமையில், சேப்பாக்கத்தில் உள்ள எம்எல்ஏ-க்கள் குடியிருப்பு வளாக கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது.

பின்னர் செய்தியாளர்களிடம் ஜே.சி.டி பிரபாகர் கூறியதாவது: அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் ராஜினாமா குறித்து புகார் அளித்த நாள் முதல் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

இந்த விவகாரம் தொடர்பாக புகார் கொடுத்திருப்பது அவர்களின் உரிமை.

இதில் சட்டப்பேரவைத் தலைவர் என்ற முறையில் யாருக்கும் அச்சம் இல்லாமல் எனது நடவடிக்கை இருக்கும்.

சட்டப்பேரவை உறுப்பினர்கள் தகுதி நீக்க மனுக்கள் மீதும் விசாரணை நடைபெற்று வருகிறது.

உயர் நீதிமன்ற உத்தரவின்படி 2 மாதத்துக்குள் விசாரணை முடிந்து முடிவு எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *