தேவா மறைவு தமிழ்த் திரையுலகிற்கு பேரிழப்பு- முதல்வர் விஜய்…!!

சென்னை:

பிரபல இசையமைப்பாளர் தேவா மாரடைப்பால் இன்று காலமானார். அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தேவா மறைவுக்கு முதலமைச்சர் விஜய் இரங்கல் தெரிவித் துள்ளார். இதுதொடர்பாக முதலமைச்சர் விஜய் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

தமிழ்த் திரையுலகின் தனித்துவமான இசையமைப்பாளரும், கானா பாடல்களால் எளிய மக்களின் மனங்களைக் கவர்ந்த வருமான ‘தேனிசைத் தென்றல்’ தேவா அவர்கள் மறைந்த செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும், ஆழ்ந்த வேதனையும் அடைந்தேன்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்ததோடு, பல கானா பாடல்களை எழுதி, அவரே பாடியும் உள்ளார்.

கலைமாமணி உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்ற தேவா அவர்களின் இசைப் பயணமும், பாடல்களும் திரையிசை வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும். அவரது மறைவு தமிழ்த் திரையுலகிற்கு பேரிழப்பாகும்.

இசையமைப்பாளர் தேவா அவர்களை இழந்துவாடும் குடும்பத் தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், திரைத் துறையினருக்கும், இசை ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள் கிறேன்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *