கிரீஸ் நாட்டில் திருமணம்; காவ்யா மாறனை கரம் பிடிக்கிறார் அனிருத்!!

சென்னை:
பிரபல தயாரிப்பாளர் கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறனை, இசையமைப்பாளர் அனிருத் திருமணம் செய்துகொள்ளப் போகிறார்.

ஆட்டம் போட வைக்கும் இசையால் இளசுகளை ஈர்த்து வருபவர் இசையமைப்பாளர் அனிருத். அடுத்தடுத்து வெற்றிப் படங்களுக்கு இசையமைத்து, திரையுலகின் தவிர்க்க முடியாத இசையமைப்பாளராக வலம் வரும் அனிருத் இசையில் சமீபத்தில் ‘ஜெயிலர்-2’ திரைப்படமும் வெளியாகி கவனம் ஈர்த்து வருகிறது.

கடந்த ஓரிரு ஆண்டுகளாகவே அனிருத்தின் காதல் குறித்த தகவல்கள் பெரும் பரபரப்பை உண்டாக்கி வருகின்றன.

அதாவது பிரபல சினிமா தயாரிப்பாளரான கலாநிதிமாறனின் மகளும், ஐதராபாத் சன்ரைசர்ஸ் கிரிக்கெட் அணியின் நிர்வாக பொறுப்பாளருமான காவ்யா மாறனும், அனிருத்தும் காதலித்து வருவதாக தொடர்ந்து கிசுகிசுக்கப்பட்டு வந்தது. ஆனாலும் இதுகுறித்து இருதரப்பில் இருந்தும் மவுனம் மட்டுமே பதிலாக இருந்து வந்தது.

தற்போது இந்தப் பேச்சு அடுத்த கட்டத்தை எட்டி, இருவரும் திருமண வாழ்க்கையில் இணையத் தயாராகி இருக்கிறார்கள்.

அதாவது கிரீஸ் நாட்டில் அடுத்த மாதம் (நவம்பர்) 11-ந்தேதி அனிருத்-காவ்யா மாறன் திருமணம் நடைபெறுகிறது.

அனிருத்-காவ்யா மாறன் திருமணம் முதலில் செஷல்ஸ் நாட்டில் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது கிரீஸ் நாடு தேர்வு செய்யப்பட்டிருக்கிறதாம்.

கடற்கரைகள், அழகிய கட்டிடங்கள், கண்கவர் இயற்கைக் காட்சிகள் என உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களைக் கொண்ட கிரீஸ், பிரமாண்டமான திருமண நிகழ்ச்சிகளுக்கும் ஏற்ற இடமாக கருதப்படுகிறது.

அந்தவகையில் அனிருத்-காவ்யா மாறனின் திருமணத்தை கிரீசில் நடத்திட இரு குடும்பத்தாரும் முடிவு செய்துள்ளார்கள். இந்த திருமணத்தில் முன்னணி பிரபலங்கள், இரு குடும்பத் தார் மற்றும் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே அழைத்து செல்லப்பட இருக்கிறார்கள்.

இதற்காக 4 தனி விமானங்களும் ஏற்பாடு செய்யப்பட்டிருக் கிறது.

அதேவேளை இன்னொரு தகவலும் கிடைத்திருக்கிறது. அதாவது நவம்பர் மாதத்தின் முதல் 2 வாரங்களுக்கு இசை நிகழ்ச்சிகள், இசைகோர்ப்பு பணிகள் உள்ளிட்டவைகளை அனிருத் ஒத்திவைத்திருப்பதும் தெரியவந்திருக்கிறது.

இது ஒட்டுமொத்த திரையுலகினரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.

பொதுவாக திரையுலகப் பிரபலங்களின் திருமணச் செய்திகள் வெளியாகும்போது, திருமண இடம், தேதி, விருந்தினர்கள் பட்டியல், ஆடை வடிவமைப்பு. கொண்டாட்ட நிகழ்ச்சிகள் என பல்வேறு விவரங்களைத் தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆர்வம் காட்டுவார்கள்.

அந்தவகையில், அனிருத்-காவ்யா மாறன் திருமணமும் பல்வேறு எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது.

இது இசை மற்றும் கிரிக்கெட் உலகத்தை இணைக்கும் முக்கியமான நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் நவ. 21 ஆம் தேதி சென்னையில் இசையமைப்பாளர் அனிருத் – காவ்யா மாறன் திருமண வரவேற்பு விழாவுக்காக, சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறன் தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டியை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தார்.

இதுதொடர்பாக தெலுங்கானா முதலமைச்சரின் அதிகாரப் பூர்வ எக்ஸ் வலைதளத்தில், “சன் குழுமத் தலைவர் கலநிதி மாறன் மற்றும் அவரது மனைவி காவேரி மாறன் ஆகியோர், ஜூபிலி ஹில்ஸில் உள்ள முதல்-மந்திரி ஏ. ரேவந்த் ரெட்டியின் இல்லத்தில் அவரைச் சந்தித்து, தங்களது மகள் காவ்யா மாறனின் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு அழைப்பு விடுத்தனர்.

காவ்யா மாறன் மற்றும் அனிருத் ரவிச்சந்தர் ஆகியோரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி, நவம்பர் 21 ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது.” என்று அதில் பதிவிடப்பட்டுள்ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *