சென்னை:
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ், ரிஷிகாந்த், சனந்த் நடிப்பில் செப். 25-ம் தேதி வெளியான படம் ‘டோரதி’. இளையராஜா இசையமைத்திருந்தார். இப்படம் வரவேற்பைப் பெற்றது.
சமீபத்தில் படக்குழுவை நேரில் அழைத்து ரஜினிகாந்த் பாராட்டினார். இந்நிலையில் சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு, இப்படக் குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
கார்த்திக் சுப்புராஜ் அமைச்சருடனான சந்திப்பு குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், “சமூகத்தில் ஆரோக்கியமான உரையாடலையும் மாற்றத்தையும் உருவாக்கிய எங்களது படத்தை அமைச்சர் வன்னி அரசு பாராட்டினார்.
திருநங்கைகளுக்கு எதிரான வெறுப்புணர்வை ஒழிப்பதற்குக் கடுமையான விதிகளை அமல்படுத்தவும் திருநங்கை சமூகத்துக்காகப் பிரத்யேக ஹெல்ப் லைன் எண் உருவாக்கவும் நான் விடுத்த கோரிக்கையை ஏற்றுக்கொண்டார்.
எங்கள் திரைப்படத்தைப் பற்றிய பாராட்டுகளும் ஆதரவும் எங்களுக்கு மிகுந்த ஊக்கமளிக்கின்றன” என்றார்.