நாதக நிர்வாகி கார்த்திகா கோவையில் கைது!!

கோவை:
தாராபுரம் இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்ட கார்த்திகா மற்றும் அவரது கணவர் உட்பட ஆறு பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

இன்று (அக்.20) கோவையில் உள்ள அவரது இல்லத்தில் காவல் துறையினர் இந்த கைது நடவடிக்கையை மேற்கொண்டனர். கைது செய்யப்பட்ட அவரை போலீஸார் தாராபுரம் அழைத்து சென்றனர்.

தாராபுரம் சட்டப்பேரவை தொகுதிக்கான இடைத்தேர்தலின் போது தவெக வேட்​பாளர் சத்​ய​பா​மாவை ஆதரித்​து முதல்​வர் விஜய், அக்.4-ம் தேதி வாகன பிரச்​சா​ரத்​தில் ஈடு​பட்​டார்.

அப்போது வீராச்சிமங்​கலம் என்ற பகு​தி​யில் முதல்​வர் செல்​வதற்கு சற்று நேரத்​துக்கு முன்​பாக, நாம் தமிழர் கட்​சி​யின் வேட்​பாளர் கார்த்​திகா தொண்​டர்​களுடன் வாகன பேரணி​யாக வந்தார்.

முதல்​வர் வருகைக்​காக அங்கு நின்​றிருந்த போலீ​ஸார் பாது​காப்பு கருதி அவர்​களை மாற்று வழி​யில் செல்​லு​மாறு அறி​வுறுத்​தினர்.

அப்​போது நாதக​வினர் போலீ​ஸாருடன் வாக்​கு​வாதத்​தில் ஈடுபட்டனர். அதற்​குள் முதல்​வரின் வாக​னம் அவ்​வழி​யாக வரத்​தொடங்​கியது. இந்நிலையில், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.

மேலும், தேர்தல் பரப்புரையின் போது பேனர் அகற்றப்பட்ட விவகாரத்தில் காவல் நிலையத்தை கார்த்திகா தலைமையில் நாதகவினர் முற்றுகையிட்டனர்.

இது தொடர்பாகவும் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தாராபுரம் தொகு​தி​யில் தவெக சார்பில் போட்டியிட்ட சத்யபாமா வெற்றி பெற்றார். நாதக வேட்​பாளர் ​கார்த்திகா 5,268 வாக்​கு​கள் மட்டுமே பெற்று டெபாசிட்டை இழந்​தார்.

கடந்த பொதுத்​தேர்​தலில் தாராபுரத்தில் அக்​கட்சி வேட்​பாளர் திவ்யா வாங்​கிய 6,026 வாக்​கு​களை​விட​வும் இது குறைவு என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

இதனால் அக்கட்சியின் வாக்கு சதவீதமும் குறைந்தது குறிப்பிடத்தக்கது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *