‘மூக்குத்தி அம்மன் 2’ ஆயுத பூஜை சிறப்பு போஸ்டர்!!

சென்னை:
மஹாசக்தி’ என்ற அடைமொழியுடன் வெளியாகியுள்ள இந்த கம்பீரமான போஸ்டர், சமூக வலைத்தளங்களில் தற்போது காட்டுத்தீயாய் பரவி வருகிறது.


கடந்த 2020-ம் ஆண்டு ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் நேரடியாக ஒடிடி-யில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான ‘மூக்குத்தி அம்மன்’ படத்தின் அதிகாரப்பூர்வ தொடர்ச்சியாக இந்த இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது.

இந்த இரண்டாம் பாகத்தை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் ஐசரி கணேஷ் தயாரிக்க, அவினி சினிமேக்ஸ் மூலம் குஷ்பு சுந்தர் மற்றும் விக்னேஷ் சிவன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.

ரூ.100 கோடிக்கும் அதிகமான மெகா பட்ஜெட்டில் உருவாகியுள்ள இப்படத்தின் ‘ரைஸ் ஆப் மஹாசக்தி’ டீசர் அண்மையில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது.

பழங்காலப் போர் சூழல் மற்றும் தற்காலப் பேரழிவு ஆகிய இரண்டு காலகட்டங்களையும் இணைக்கும் வகையில், அதிநவீன கிராபிக்ஸ் காட்சிகளுடன் இந்த டீசர் மிரட்டலாக உருவாக்கப்பட்டுள்ளது.

இதில் கையில் குழந்தையுடனும், திரிசூலத்துடனும் அம்மன் அவதாரத்தில் நயன்தாரா தோன்றும் கம்பீரமான காட்சிகள் ரசிகர்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிறச் செய்துள்ளது.

முதல் பாகத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்ட கதைகளத்தில் சுந்தர் சி மற்றும் வெங்கட் ராகவன் இணைந்து இதன் திரைக்கதையை அமைத்துள்ளனர்.

நயன்தாராவுடன் இணைந்து ஊர்வசி, யோகிபாபு, ரெஜினா கேசண்ட்ரா, அபிநயா, மைனா நந்தினி, துனியா விஜய், சிங்கம்புலி, சினேகா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்துள்ளார். கோபி அமர்நாத் ஒளிப்பதிவையும், ஃபென்னி ஆலிவர் படத்தொகுப்பையும் கவனித்துள்ளனர்.

தமிழ்நாட்டின் முன்னணி விநியோக நிறுவனமான ரெட் ஜெயண்ட் மூவிஸ் இப்படத்தின் திரையரங்கு உரிமையைக் கைப்பற்றியுள்ளது.

தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய 5 மொழிகளில் வருகிற நவம்பர் மாதம் 6-ஆம் தேதி தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு இப்படம் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் மிக பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *