ஐதராபாத்தில் நடைபெற்ற பதுகம்மா மலர் திருவிழாவில் ஜோடியாகக் கலந்துகொண்ட விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தனா !!

சென்னை:
ஐதராபாத்தில் நடைபெற்ற இந்த வண்ணமயமான திருவிழாவில், விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகிய இருவரும் பாரம்பரிய உடைகளில் வருகை தந்து ரசிகர்களைக் கவர்ந்தனர்.

அங்கு மலர்களால் அடுக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த ‘பதுகம்மா’விற்கு அருகில் நின்று, அவர்கள் இருவரும் இணைந்து சிறப்பு வழிபாடுகளைச் செய்தனர்.

திரையிலும் நிஜ வாழ்விலும் ரசிகர்களால் பெரிதும் ரசிக்கப்படும் இந்த ஜோடி, பாரம்பரிய முறைப்படி பதுகம்மா திருவிழாவைக் கொண்டாடிய புகைப்படங்களும் வீடியோக்களும் தற்போது சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயாகப் பரவி வருகின்றன.

தங்களுக்குப் பிடித்த நட்சத்திரங்களை நேரில் கண்ட ரசிகர்கள், உற்சாகத்துடன் கோஷமிட்டு தங்களது வரவேற்பை வெளிப்படுத்தினர்.

தெலங்கானா கலாச்சாரத்தின் அடையாளமாக விளங்கும் இப்பண்டிகை, நவராத்திரி காலங்களில் பெண்களால் ஒன்பது நாட்கள் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படும் மலர் திருவிழாவாகும்.

வண்ணமயமான தனித்துவமிக்க மலர்களைக் கோபுர வடிவில் அடுக்கி, ‘பதுகம்மா’ வடிவம் செய்து பெண்கள் பாடி ஆடுவது இதன் சிறப்பம்சமாகும். இந்த நன்னாளில் திரை பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *