டெல்லியில் ராவணனுடன் சேர்த்து பிதம்​பராவில் 30 அடி உயர கரப்பான் பூச்சி உருவபொம்​மை எரிப்பு!!

புதுடெல்லி:
விஜயதசமியை முன்​னிட்டு, வழக்​க​மான ராவணன், கும்​பகர்​ணன் மற்​றும் மேகநாதன் உரு​வப் பொம்​மை​களு​டன் சேர்த்து டெல்லி பிதம்​பராவில் 30 அடி உயர கரப்பான் பூச்சி உருவபொம்​மையும் நேற்று எரிக்​கப்​பட்​டது.

சிஜேபி-க்கு எதிரான கேலி நட​வடிக்​கை​யாகவே இது பார்க்​கப்​படு​கிறது. கரப்பான்பூச்சி உருவபொம்மையை எரிப்பது போன்ற வீடியோ பரவிவருகிறது.

இது​குறித்து சிஜேபி நிறு​வனர் அபி​ஜித் திப்கே மற்​றும் சட்​டப்​பி​ரிவு தலை​வர் ரத்னாசிங் கூறும்​போது,“இலவச விளம்​பரத்​துக்கு நன்றி.

இந்த நாட்​டில் வெறும் கூத்​துகளை மட்​டுமே நடத்​திக் கொண்டிருங்​கள்” என்று குறிப்​பிட்​டுள்​ளனர்.

இக்கருத்​துகள் சமூகவலை​தளங்​களில் விவாதங்​களை ஏற்​படுத்​தி​யுள்​ளன. பல பயனர்​கள் கரப்​பான் பூச்சி உரு​வப் பொம்மை எரிப்பை தீமையின் மீதான நன்​மையின் வெற்​றியோடு ஒப்​பிட்​டுப் பேசிவரு​கின்​றனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *