இந்​தி​யா​வுக்கு எதிரான சக்​தி​களை கண்டறிந்து அவர்களை தோற்​கடிக்க வேண்​டும் – டெல்லி தசரா விழாவில் பிரதமர் மோடி பேச்சு!!

புதுடெல்லி:
இந்தியாவுக்கு எதிரான சக்தி களை தோற்கடிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். டெல்லி துவாரகா பகுதி ஸ்ரீ ராம் லீலா சொசைட்டி சார்​பில் நேற்று தசரா விழா நடை​பெற்​றது.

இதில் குடியரசுத் தலை​வர் திரவுபதி முர்மு பங்​கேற்​றார். அவர் கூறும்​போது, “நாடு முழு​வதும் தசரா விழா கொண்​டாடப்​பட்டு வரு​கிறது.

பல்​வேறு நகரங்​களில் ராம்​லீலா அரங்​கேற்​றப்​பட்டு வரு​கிறது. இதன்​மூலம் பகவான் ராமரின் நல்​லாட்சி, நற்​குணம் மக்களுக்குப் போதிக்​கப்​படு​கிறது” என்று தெரி​வித்​தார்.

இந்த விழா​வில் டெல்லி முதல்​வர் ரேகா குப்தா மற்​றும் மூத்த அமைச்சர்கள் பங்​கேற்​றனர்.

கிழக்கு டெல்​லியை சேர்ந்த ஸ்ரீ ராம்​லீலா கமிட்டி சார்பில் டிடிஏ உத்​சவ் மைதானத்​தில் ஆண்​டு தோறும் தசரா விழா நடத்தப்​பட்டு வரு​கிறது.

அங்கு நேற்று நடை​பெற்ற தசரா விழா​வில் பிரதமர் நரேந்​திர மோடி தலைமை விருந்​தின​ராகப் பங்​கேற்​றார். அப்​போது அவர் பேசிய​தாவது: தசரா என்​பது வெறும் விழா கிடை​யாது. இந்தியாவுக்கு ஊக்க சக்தி வழங்​கும் நிகழ்ச்சி்.

தசராவை ஒட்டி நாடு முழு​வதும் ராம்​லீலா நாடகங்​கள் நடை​பெற்று வரு​கின்​றன.

இதன்​மூலம் பகவான் ராமரின் போதனைகள் மக்​களுக்கு எடுத்துரைக்​கப்​படு​கிறது. தீவிர​வாதம் வேரறுக்​கப்​படும் என்பதும், பொய்​மையை, வாய்மை வெல்​லும் என்​ப​தும் ராம்​லீலா மூலம் தெளிவாக எடுத்​துரைக்​கப்​படு​கிறது.

பகவான் ராமரின் வாழ்க்​கை​யில் பல்​வேறு இன்​னல்​கள் எழுந்​தன. ஆனால் அவர் ஒருபோதும் நீதி​யின் பாதையில் இருந்து தவறவில்லை.

பகவான் ராமர் காட்​டிய வழி​யில் மத்​திய அரசு ஆட்சி நடத்தி வரு​கிறது. வளர்ச்சி அடைந்த இந்​தி​யாவை உருவாக்க ராமர் ஊக்க சக்​தி​யாக இருப்​பார்.

இன்​றைய சூழலில் 3 எதி​ரி​களுக்கு எதிராக நாம் போரிட வேண்டும்.

நாட்​டின் கவுரவம், கண்​ணி​யத்​துக்கு களங்​கத்தை ஏற்​படுத்​து​வோர், நாட்​டில் பிரி​வினையைத் தூண்​டுவோர், இந்​திய கலாச்​சா​ரத்​துக்கு எதிரானவர்​கள் ஆகியோ​ருக்கு எதிராக நாம் போரிட வேண்​டும்.

இந்​தி​யா​வுக்கு எதிரான சக்​தி​களை கண்டறிந்து அவர்களை தோற்​கடிக்க வேண்​டும். இவ்​வாறு பிரதமர் நரேந்​திர மோடி பேசினார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *