தாராபுரம்:
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதி இடைத் தேர்தலின் போது நாதக சார்பில் பிளக்ஸ் பேனர் வைத்தல், காவல் நிலையம் முற்றுகை, முதல்வர் ரோடு ஷோவில் இடையூறு செய்தல், காவல் துறையினருக்கு மிரட்டல் மற்றும் தவெகவைச் சேர்ந்த தம்பதியைத் தாக்கியது ஆகிய பல்வேறு புகார்களின் பேரில் தாராபுரம் போலீஸார் நாதகவினர் 12 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.
இதைத்தொடர்ந்து, நாதக வேட்பாளர் கார்த்திகா, அவரது கணவர் முருக சந்திரகுமார், நிர்வாகிகள் சஞ்சய் காந்தி, இசைமதிவாணன் (40), விக்னேஷ் பாண்டியன் (25), ஷேக் பரீத் (36), கோவிந்தராஜ் (47), சூர்யா (21), கந்தசாமி (42), கோகுல் ஆகிய 10 பேர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர்.
மேலும், நாகர்கோவிலைச் சேர்ந்த வெங்கடேஷ், கோவையைச் சேர்ந்த மோகன் பிரசாத் ஆகியோரை கேரளாவில் வைத்து நேற்று காவல் துறையினர் கைது செய்தனர்.
இவர்கள் 12 பேரும் தாராபுரம் நீதித்துறை நடுவர் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு, 15 நாள் நீதிமன்றக் காவலில் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.